கம்பராமாயணம் 2620 · ஆரணிய 1.29

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வட்டம் இட்ட கிரி அற்று உக , வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர்வாளி எதிரே கடவலான் ,
விட்ட விட்ட மலை மீள , அவன் மெய்யின் , விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறு படலும் .

பொருள் · Meaning in Tamil

வட்டம் இட்ட கிரி அற்று உக - விராதன் எறிந்த சூழ்ந்து வரும் மலைகள் பிளவுபட்டு விழுமாறு; (இராமன் வயங்கு வயிரக் கட்டு அமைந்த கதிர்வாளி எதிரே கடவலால் - விளங்குகின்ற உறுதியான கட்டுப் பொருந்திய ஒளிமிக்க அம்புகளை (விராதனுக்கு) எதிராக எய்தலால்; விட்ட விட்ட மலை மீள - (அவன்) மேன்மேல் எறிந்த மலை எல்லாம் திரும்பவும், அவன் மெய்யில் - விராதன் உடலில், விசையால் பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறு படலும் - வேகத்தோடு எறிப்பட்ட இடங்களில் எல்லாம் உடம்பு காயம் பட்ட அளவில்.

'வட்டமிட்ட' என்ற தொடரை வாளியுடன் சேர்ப்பதும் உண்டு. பட்ட பட்ட - மிகுதிபற்றி அடுக்கு வந்தது. விராதன் எறிந்த மலைகள் இராமன் அம்பினால் திரும்பி அவனையே காயப்படுத்தின. ஊறு - புண்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the whirling hills were split and fell, as he drove against them
  2. bright arrows fitted with hard diamond bindings,
  3. every mountain he hurled came flying back, and on his body, by their force,
  4. wherever they struck, everywhere, his flesh was wounded.

What the poem says

Irāmaṉ's diamond-bound arrows shatter the hurled mountains and drive them back at the demon, so that the very rocks he threw wound him all over his body. The repeated word 'struck, struck' stresses how many blows he took.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭṭam iṭṭa kiri aṟṟu uka, vayaṅku vayirak
kaṭṭu amainta katir vāḷi etirē kaṭavalāl,
viṭṭa viṭṭa malai mīḷa, avaṉ meyyil, vicaiyāl
paṭṭa paṭṭa iṭam eṅkum uṭal ūṟupaṭalum.