கம்பராமாயணம் 2622 · ஆரணிய 1.31

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏறு சேவகன் - நாளும் வளரும் வீரப்பண்புடைய இராமன்; இரண்டினொடு இரண்டு கணையால் - நான்கு அம்புகளால், வேறு வேறு துணி செய்து அது விழுத்தி - பல துண்டுகளாக வெட்டி அந்த மராமரத்தைத் தள்ளி விட்டு; நிமிர் தோளிடையும் மார்பினிடையும் மாறு மாறு - உயர்ந்த தோள்களிலும் மார்பிலும் மாற்றி மாற்றி, விசையால் ஆறும் ஆறும் அயில் வெங்கணை அழுத்த - வேகத்தால் பன்னிரண்டு கொடிய அம்புகளைப் பதியும்படி எய்ய; அவனும் - அவ்வரக்கனும்

விராதன் எறிந்த மராமரத்தை இராமன் நான்கு அம்புகளால் துண்டித்து வீழ்த்தினான். அவ்வரக்கன் மார்பிலும் தோளிலும் அவ்வாறே அம்புகளைச் செலுத்தினான். ஏறு சேவகன் என்பதற்கு நடை, வீரம், தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிங்கம் போன்ற வீரன் எனலுமாம். இடை -இடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ever-rising hero, with two arrows and two more,
  2. cut it apart into pieces and threw it down, and with force,
  3. turn by turn, into the lifted shoulders and into the chest,
  4. drove six and six fierce, sharp arrows deep; and he, the demon,

What the poem says

Irāmaṉ cuts the tree to pieces with four arrows and then drives twelve more into Virātaṉ's shoulders and chest, alternating between them. He is called a hero whose valour keeps rising, or one like a lion in gait and bearing. The sentence continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṟu cēvakaṉ iraṇṭiṉoṭu iraṇṭu kaṇaiyāl
vēṟu vēṟu tuṇiceytu, atu viḻutti, vicaiyāl
māṟu māṟu nimir tōḷiṭaiyum mārpiṉiṭaiyum
āṟum āṟum ayil veṅ kaṇai aḻutta, avaṉum.