கம்பராமாயணம் 2624 · ஆரணிய 1.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராமன் எரியின் வார்கணை விட - இராமபிரான் நெருப்புப் போன்ற நீண்ட அம்புகளை எய்ய; எங்கும் நிலையாது உருவி ஓட - எவ்விடத்தும் தடைப்படாமல் அரக்கன் உடலில் அவ்வம்புகள் ஊடுருவிச் செல்ல; மறம் ஓடுதல் செயா உணர்வினான் - கொடுமை நீங்கா அறிவுடைய அவ்வரக்கன்; அருவி பாயும் வரை போல்-அருவிகள் பாய்ந்து ஓடும் மலை போல; குருதி ஆறு பெருகிச் சொரிய -இரத்த ஆறுபோலத் தன் உடம்பிலிருந்து பெருக்கெடுத்து வழிய; வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் - மிகுந்த வலிமை அழிந்து அறிவிழந்த அளவில்.
எரியின் வார்கணை அக்கினி யாத்திரமும் ஆகும். எரிக்க வேண்டிய அவ்வம்பு விராதனின் வரவலிமையால் அவனை எரிக்காமல் ஊடுருவியது என்பர். விராதனுக்கு மலையும் அவன் உடலிலிருந்து பெருகும் இரத்தத்திற்கு அருவியும் முறையே உவமையாம். குருதி ஆறு - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Irāmaṉ loosed long arrows like fire, stopping nowhere
- they ran right through him; he, whose mind would never let cruelty go,
- like a mountain down which falls leap, poured out a river of blood,
- streaming; his speed and strength were spent, and his senses failed.
What the poem says
Irāmaṉ's fiery arrows pass clean through Virātaṉ, and blood pours from him like waterfalls down a mountain. Because of his boon the arrows, which might have burned him, only pierce him. Still cruel at heart, he loses strength and begins to faint.