கம்பராமாயணம் 2626 · ஆரணிய 1.35

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உண்டு எழுந்த உணர்வு அவ் வயின் உணர்ந்து முடுகித்
தண்டு எழுந்து அனைய தோள் கொடு சுமந்து தழுவிப்
பண்டு எழும் தனது வன்கதி பதிற்றின் முடுகிக்
கொண்டு எழுந்தனன் , விழுந்து அழி கொழுங் குருதியான் .

பொருள் · Meaning in Tamil

விழுந்து இழி கொழுங் குருதியான் - கீழே விழுந்து பெருகி வழியும் மிகுந்த இரத்தத்தை உடையவனாகி; அவ்வயின் உண்டு எழுந்த உணர்வு உணர்ந்து - அவ்விடத்தில் மீண்டும் எழும் உணர்ச்சி அடைந்தவனாகி; முடுகித் தண்டு எழுந்தனைய தோள்கொடு தழுவிச் சுமந்து -விரைந்து தண்டாயுதம் போன்ற தன் தோள்களைக் கொண்டு இராமலக்குவரை அணைத்துத் தூக்கி; பண்டு எழும் தனது வன்கதி பதிற்றின் முடுகி - பழமையில் தன்னிடம் உண்டாகும் வலிய வேகத்தில் பதின்மடங்கு விரைவு கொண்டு; கொண்டு எழுந்தனன் - மேற்கொண்டு எழும்பியவனாய்

இரத்த ஆறு பெருகிட உணர்வு சோர்வுற்ற விராதன் மீண்டும் உணர்வுற்று இராமலக்குவரைத் தன்தோளில் சுமந்து விரைந்து சென்றனன். தண்டு - தண்டம் என்பதன் திரிபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Feeling his senses rise again there, he rushed on;
  2. with shoulders like lifted maces he clasped and bore them,
  3. and with ten times the strong speed that was his of old
  4. rose up, carrying them, his rich blood falling and streaming down.

What the poem says

Coming round from his faint, the bleeding Virātaṉ seizes the two princes, holds them on his mace-like shoulders and springs up with ten times his former speed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṭu eḻunta uṇarvu avvayiṉ uṇarntu muṭuka
taṇṭu eḻuntaṉaiya tōḷkoṭu cumantu taḻuvi
paṇṭu eḻum taṉatu vaṉ kati patiṟṟiṉ muṭukik
koṇṭu eḻuntaṉaṉ, viḻuntu iḻi koḻuṅ kurutiyāṉ.