கம்பராமாயணம் 2627 · ஆரணிய 1.36

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேருவினை நாள் தொறும் வலம் செய்து வந்து உழல்வோர் இந்து சூரியரை ஒத்து - மேருமலையைத் தினமும் வலமாகச் சுற்றித் திரிபவர்களாம் சந்திர சூரியர்களைப் போன்று; இருவரும் பொலிய - இராமலக்குவர் அவன் தோள்கள் மீது விளங்க, முந்து வான் முகடு உற - மேல் உள்ள வானத்தின் உச்சியைப் பொருந்த; கடிது முட்டி - வேகமாக முட்டிக்கொண்டு; சிந்து சோரியொடு - வழியும் இரத்தத்தோடு; முடுகச் சாரிகை திரிந்தனன்- (விராதன்) வேகமாக வட்ட மிட்டுச் சுற்றினான். அரோ - அசை; ஏ- ஈற்றசை

மேருமலை அரக்கனுக்கும், சந்திர சூரியர் இராமலக்குவர்க்கும் உவமை. சந்திர சூரியர் மேருவை வலமாகச் சுற்றுதல் என்பது புராண மரபு. முந்து வான் என்பதை மற்றப் பூதங்களுக்கு முன்வைத்து எண்ணப் பெறும் வானம் என்றுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Butting swiftly up till he struck the high vault of the sky, rushing on,
  2. with blood spilling, he wheeled round and round, ah!
  3. and like those who come every day and circle Mēru, keeping it to their right,
  4. the moon and the sun, the two of them shone.

What the poem says

Virātaṉ shoots up until he seems to touch the top of the sky and whirls round and round, blood streaming. The two brothers on his shoulders look like the moon and the sun, which, in Purāṇic belief, circle Mount Mēru every day; the demon himself is the mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muntu vāṉ mukaṭu uṟak kaṭitu muṭṭi muṭukic
cintu cōriyoṭu cārikai tirintaṉaṉ arō,
vantu mēruviṉai nāḷtoṟum valamceytu uḻalvōr
intu cūriyarai ottu iruvarum poliyavē.