கம்பராமாயணம் 2628 · ஆரணிய 1.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் - பொன் நிறமுள்ள இலக்குவனோடு இராமன் விளங்கிய தோளை உடைய விராதன்; விசைதோய் - வேகமிக்கு; அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் - அப் புறத்ததான ஆகாயத்தில் எழுந்து செல்கின்றவனாம் அவ் வரக்கன்; அறம் சிவணது அன்ன - தருமம் வடிவெடுத்ததைப் போன்ற, சிறை - இறக்கைகளோடு; முன் அவரொடு ஏகு செலவத்து - முன்னம் பலராமன் கண்ணனொடு செல்கின்றதை உடைய; உவணன் என்னும் நெடுமன்னவனும் ஒத்தனன் - கருடன் என்னும் சிறப்புடை மன்னவனைப் போன்று விளங்கினான்.
இங்கு விராதனைக் கருடனாகவும் இராமலக்குவரைப் பலராமன் கண்ணனாகவும் உவமிக்கப்பெற்றுளது. கருடன் தருமத்தின் வடிவு என்பர். இராமனைக் கண்ணன் என்றது கருணை உடையவன் என்பது குறித்துமாம். இராமலக்குவர் முன்னவதாரம். கண்ணன், பலராமன், பின்னவதாரம்; இவ்வாறு கூறுதல் கவி மரபு. சுவண வண்ணன் - பொன் வண்ணனாம் சிவனைக் குறிப்பர் சிலர். அப்போது சங்கர நாராயணன் உவமை ஆவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He, on whose shoulders dwelt Kaṇṇaṉ with the gold-hued one, full of speed,
- rising into that sky and soaring on, was like
- the great king called Uvaṇaṉ, his wings like dharma itself,
- as he once flew with those two, ah!
What the poem says
Carrying the brothers aloft, Virātaṉ looks like Garuḍa, the king of birds, whose wings are said to embody dharma, carrying Kṛṣṇa and Balarāma. Irāmaṉ is called Kaṇṇaṉ, the dark one or the compassionate one, and Ilakkuvaṉ is the golden one.
The comparison runs backward in time, since Kṛṣṇa and Balarāma are later incarnations, but the poet's convention allows it. Some read the golden one as Civaṉ, making the pair Śaṅkara and Nārāyaṇa.