கம்பராமாயணம் 2629 · ஆரணிய 1.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலச்சீதை - உயர்குலத்துதித்த சீதை; மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் போதலோடும்- பெருங்கருணை பூண்ட தன் துணைவனாம் இராமன் வஞ்சம் செய்த விராதனின் வலிமைக்குட்பட்டுத் தூக்கச் செல்லும்போது; அலமந்தனள் - வாடிக் கலங்கினாள்; புலர்ந்து சேவல்பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் - வாட்டமடைந்து ஆணன்னம் பிறரால் பிடிபட மென் சிறகுள்ள பெண் அன்னம் போன்றவளாய்; பொடியில் கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் - புழுதியில் கூந்தலொடு துவளும் பூங்கொம்பு போல விழுந்தாள்.
தன் கூந்தல் புழுதியில் புரளப் பூங்கொம்பு போல் சீதை விழுந்தாள். குலம் - நிமிகுலம். சனகன் யாகசாலை அமைக்க நிலத்தை உழுதபோது உழுபடைச் சாலில் கிடைத்ததால் சீதை எனப்பட்டாள். சேவல் - ஆண் அன்னம், கோதை - கூந்தல். கோதையோடும் ஒசிகொம்பு -காற்றினால் அசையும் பூங் கொம்பு எனவும் கொள்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As her husband of great compassion was carried off by the might of the deceiver,
- she was in anguish; withering, into the dust
- she fell like a bough snapped with its flowers, Cītai of noble line,
- like a soft-winged swan whose mate has been seized.
What the poem says
Seeing Irāmaṉ carried off by the demon, Cītai, born of the noble line of Nimi, collapses into the dust like a flowering branch broken off, her hair in the dirt. She is like a female swan whose mate has been caught. The commentary recalls that she was named Cītai because Caṉakaṉ found her in the furrow, cītā, while ploughing.