கம்பராமாயணம் 2630 · ஆரணிய 1.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எழுந்து - மீண்டும் (சீதை) எழுந்து; உதவும் துணை பின்னை ஏதும் பெறாள் - தனக்கு உதவிடும் துணை வேறு ஒன்றும் பெறாதவளும்; உரைபெறாள் - ஆறுதல் கூறும் மொழி ஒன்றும் பெறாதவளும் ஆகி; மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் - மின்னலைப் போன்ற இடை துவண்டிட வேகமாய் விராதனைத் தொடர்ந்தவள்; அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு - தாய் போன்று பிறரிடம் அன்பு காட்டும் அறவோராம் இராமலக்குவரை விட்டு விட்டு; என்னையே நுகர்தி என்றனள் - என்னை நீ கொண்டு போய் உண்ணுக என்று கூறினளாய்; விழுவாள் - (அவன்முன்) மீண்டும் விழுவாள்.
இராமலக்குவர் அறவோர் ஆதலால் அவர்களால் உலகம் நலம் பெறும் என்பதால் அவர்களை விட்டு விட்டுத் தன்னை உண்ணுமாறு கேட்கிறாள் சீதை. மின்னலின் ஒளியும், தனக்கெனத் தனி உருவின்மையும் சீதை இடைக்கு உவமையாகக் காரணமாயின. உரை பெறாள் என்பதால் காட்டில் சீதை தனித்த அபலையாய் உள்ள அவல நிலை புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, finding no one at all to help her, finding no word of comfort,
- she ran after him, her lightning-slender waist bending,
- 'Let go these righteous ones, loving as a mother,
- and devour me instead!' she cried, rising and falling again.
What the poem says
Alone in the forest, with no one to help or comfort her, Cītai runs after the demon and begs him to let the brothers go and eat her instead, since the world needs those two righteous men. She keeps getting up and falling down again. Her waist is likened to lightning for its slenderness and brightness.