கம்பராமாயணம் 2631 · ஆரணிய 1.40

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி உலையும்
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து , இளையவன்
தொழுது ,'தேவி துயர்கூர விளையாடல் தொழிலோ !
பழுது ; வாழி 'என , ஊழிமுதல்வன் பகர்வுறும் .

பொருள் · Meaning in Tamil

வாய் குழறி அழுது - வாய்ச் சொற்கள் குழறி அழுது, ஆர்உயிர் அழுங்கி - அறிய உயிர் வருந்தி; அலையா - அலைந்து, எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து - ஓவியத்தில் எழுதும் பதுமை போன்ற சீதையின் துன்பநிலையை அறிந்து; இளையவன் - இலக்குவன்; தொழுது - இராமனை வணங்க; வாழி - நீர் வாழ்க; தேவி துயர்கூர - சீதை இவ்வாறு பெருந்துயரில் வருந்த; விளையாடல் தொழிலோ -விளையாட்டாக எண்ணி இருப்பது நன்றோ? பழுது - இது குற்றம்; என - என்று கூற, ஊழி முதல்வன் பகர்வுறும் - பல் உலகத்தைத்தோற்றுவித்தவனாகிய இராமன் கூறத் தொடங்குவான்.

சீதையின் அவல நிலை கண்டு இலக்குவன் இராமனிடம் 'இவ்வாறு விளையாடலாமா?' எனக் கூறினான். எழுது பாவை - அசையாது இருத்தலுக்கு உவமை. எனவே சீதை மூர்ச்சித்து விழுந்தாள் என்பர். பெரியோரிடம் பேசுமுன் கூறும் மரியாதை மொழி “வாழி” என்பதாம். இனிப்பழுது எனக் கூறியமையைப் பொறுத்துக் கொள்ளுமாறு 'வாழி' என்று கூறினான் எனலுமாம். ஊழி முதல்வன் என்பதால் இராமனின் முதன்மை நிலை புலப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Weeping, her words faltering, her dear life in anguish, wandering,
  2. she who was like a painted doll: seeing her plight, the younger one
  3. bowed and said, 'While the queen suffers so, is this a time for play?
  4. It is wrong. Long may you live!' And the First of the ages replied.

What the poem says

Cītai is weeping and wandering about in distress, then stands frozen like a figure in a painting; some say she has fainted. Ilakkuvaṉ bows to his brother and protests that it is wrong to toy with the demon while she suffers. His 'long may you live' is the respectful formula used before speaking to an elder, and also softens his rebuke. Irāmaṉ is called the First of the ages, a reminder of his divinity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻutu vāy kuḻaṟi ār uyir aḻuṅki alaiyā
eḻutu pāvai aṉaiyāḷ nilai uṇarntu, iḷaiyavaṉ
toḻutu,'tēvi tuyar kūra viḷaiyāṭal toḻilō!
paḻutu; vāḻi 'eṉa, ūḻi mutalvaṉ pakarvuṟum.