கம்பராமாயணம் 2632 · ஆரணிய 1.41

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி , இனிதின்
போகல் நன்று என நினைந்தனன் ; இவன் , பொரு இலோய் !
சாகல் இன்று பொருளன்று 'என நகும் தகைமையோன் ,
வேக வெம் கழலின் உந்தலும் , விராதன் விழவே .

பொருள் · Meaning in Tamil

பொரு இலோய் - ஒப்பில்லாதவனே! ஏகநின்ற நெறி எல்லை கடிது ஏறி - இக்காட்டில் செல்ல வேண்டிய வழியின் முடிவை விரைவில் இவன்மீது ஏறி, இனிதின் போகல் நன்று என நினைந்தனென் - இனிதாகச் செல்லுதல் நல்லது என்று எண்ணினேன்; இவன் சாகல் இன்று பொருள் அன்று - (விராதனாம்) இவன் இறப்பது இன்று நமக்கு அரிய செயல் அன்று, என நகும் தகைமையோன் - என எள்ளல் குறிப்போடு கூறிய இராமன்; விராதன் விழ - அவ்வரக்கன் கீழே விழ; வேக வெங்கழலின் உந்தலும்- வேகமாகத் தன் வலிய வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைக்கவும்; ஏ- ஈற்றசை.

“நாம் செல்லக் கருதிய வழியாக இவ்வரக்கன் செல்வதால் வருத்தமின்றி இனிது நடக்கக் கருதினேன். இவனைக் கொல்வது அரிதன்று” என எள்ளற் சிரிப்புடன் இராமன் கூறியது முன் செய்யுளில் இலக்குவன் 'தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ' என்ற கேள்விக்குரிய விடையாய் உளது. வெங்கழல் - அடியார் விரும்பும் திருவடி எனலாம். சாகல் - சாதல் பொருவிலோய் எனக் கொண்டு போர் செய்யும் வில்லை உடையோய் எனவும் கொள்வர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I thought it good to ride swiftly on him to the end of the road we must go
  2. and travel on in comfort; but for this one, O peerless one,
  3. to die today is no hard thing,' said he, laughing graciously,
  4. and he pushed with his swift, fierce, anklet-bound foot, and Virātaṉ fell.

What the poem says

Irāmaṉ answers his brother with a mocking laugh: the demon was going their way, so he thought they might ride him to the end of their road in comfort, but killing him now is no trouble. With a push of his foot he brings Virātaṉ crashing down. This is his reply to Ilakkuvaṉ's question in the previous verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēka niṉṟa neṟi ellai kaṭitu ēṟi, iṉitiṉ
pōkal naṉṟu eṉa niṉaintaṉeṉ; ivaṉ, poru ilōy!
cākal iṉṟu poruḷ aṉṟu 'eṉa nakum takaimaiyōṉ,
vēka veṅ kaḻaliṉ untalum, virātaṉ viḻavē.