கம்பராமாயணம் 2633 · ஆரணிய 1.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மீளி மொய்ம்பினர்- வலிய தோளுடைய இராமலக்குவர்; விசையால் வெகுண்டு வடிவாள் கொடு தோள் இரண்டும் துணித்து -வேகத்தோடு சினந்து தம் வடித்த கூரிய வாளைக் கொண்டு அரக்கனின் இரு தோள்களையும் வெட்டி, குதித்தலும் - கீழே தாவிக் குதித்தலும்; புருவத் தேள் இரண்டும் நெரிய - (விராதனின்) புருவமாகிய தேள் இரண்டும் நெரியும்படி சினந்து; சினவு செங்கண் அரவக்கோள் - கோபத்தால் சிவந்த கண்களை உடைய இராகு எனும் கிரகம், இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் - சந்திரன் சூரியன் எனும் இரண்டு சுடர்களையும் பற்றத் தொடர்வதுபோல நெருங்கி வரலும்,
மீளி மொய்ம்பினர் - கூற்றுவன் போல வலிமையுடையவர் எனலுமாம். கொடுக்கும், அடர்ந்த பலகாலும் கொண்ட தேளைப் புருவமாக உருவகம் செய்யப் பெற்றுள்ளது, விராதன் இராகு போல இராமலக்குவர் எனும் இரு சுடர்களைப் பற்ற வரும் உவமை புராண மரபில் புனையப்பட்டுள்ளது. இது இல்பொருளுவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their keen swords they cut off both his arms, and swiftly
- the heroes, mighty as Death, leapt down; enraged, the two
- scorpions of his brows crushed together, he drew near, like the serpent planet
- with angry red eyes chasing the two lights.
What the poem says
The brothers slice off Virātaṉ's arms with their swords and leap to the ground. Frowning in fury, his eyebrows like two scorpions, the demon closes on them, as Rāhu, the serpent planet of eclipses, chases the sun and the moon. The two princes are those two lights.