கம்பராமாயணம் 2634 · ஆரணிய 1.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புண்ணிடைப் பொழி உயிர்ப் புனல் பொலிந்து வரவும் - உடலிற் பட்ட புண்களிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் விளங்கி ஓடவும்; விண்ணிடைப் படர்தல் விட்டு - வானில் செல்வதைத் தவிர்த்து; எழு விகற்பம் நினையா - அவன் எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து; எண்ணுடைக் குரிசில் எண்ணி - எண்ணத்தில் சிறந்த இராமன் உணர்ந்து; இளையோய்! - தம்பி!; இவனை இம் மண்ணிடைக் கடிது பொத்துதல் வழக்கு - இவ்வரக்கனை இந்த நிலத்தில் விரைவாக மூடுதல் வழக்கு; எனலுமே - என்ற அளவில்; ஏ- ஈற்றசை.
உயிர்ப்புனல் உயிர் இருப்பதற்காக உடலில் ஓடும் இரத்தம். விராதன் படைகளால் இறவாததால் மண்ணில் புதைத்தலை இராமன் கூறினான். குரிசில் - பெருமையிற் சிறந்தவன், ஆண்பால் சிறப்புப் பெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the stream of life poured from his wounds and ran in splendour,
- thinking that, though he had stopped flying through the sky, he might rise again,
- the wise lord considered, and said, 'Younger one! This one
- we should swiftly bury in this earth: that is the proper way.'
What the poem says
Virātaṉ is pouring blood but, protected by his boon, he cannot be killed by weapons and may rise again. Irāmaṉ, ever thoughtful, tells Ilakkuvaṉ that the right thing is to bury him in the ground at once.