கம்பராமாயணம் 2635 · ஆரணிய 1.44

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நவை தீர் அதவம் ஆய் நறுநெய் உண்டு - குற்றமற்ற அத்திக்கட்டையால் செய்த அகப்பை கொண்டு பெய்த நறு மண நெய்யை உண்டு; உலகில் அன்பர் கருதிற்று உதவு சேவடியினால் -உலகத்தில் அடியவர் நினைத்தவற்றை அருளும் சிவந்த தன் திருப்பாதத்தால்; அமலன் - தூயவனான இராமன்; உந்துதலும் -உதைத்துத்தள்ளவும்; நல்மத யானை அனையான் - சிறந்த மதம் கொண்ட யானை போன்ற இலக்குவன்; நளிநீர் உலாவு நதம்வயின் - மிகுந்த நீர் பாயும் மேற்கு நோக்கி ஓடும் ஆற்றின் அருகில், நிலம் வகிர்ந்த குழிவாய் -மண்ணில் தோண்டிய குழியில், அழுந்த - பதிய; ஏ- ஈற்றசை மதநல்யானை அனையான் என்ற தொடர் விராதனைக் குறிக்கிறது என்பர் சிலர். யாகத்தீ தூயது என்பதை இங்கு உணரத்தக்கது. ஆழமாகக் குழி தோண்டியதால் ஊறிய நீர்க்கு யாகத்தில் பெய்யும் நெய்யாகக் கொள்ளலாம். அதவு - அதவம், அத்தி (செய்த அகப்பை) அமலன் - குற்றமற்றவன். 'அதவத்தனன் என்பது சங்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Into the pit cleft in the ground by him who was like a fine rutting elephant,
  2. by deep waters where a river runs, so that he sank in, the flawless
  3. fig-wood ladle's fragrant ghee he receives, and what his devotees in the world long for
  4. his red feet grant: with those feet the Pure One pushed him down.

What the poem says

Ilakkuvaṉ, like a fine rutting elephant, digs a deep pit by a river, and Irāmaṉ pushes Virātaṉ into it with his foot. That foot is the one that grants devotees their wishes, and Irāmaṉ is the god who receives the ghee offered with fig-wood ladles in sacrifice.

The commentary reads the scene as a sacrifice: the pit is the fire-pit, the water seeping into it is the ghee, and the demon is the offering. Some take the elephant-like one to be Virātaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mata nal yāṉai aṉaiyāṉ nilam vakirnta kuḻivāy
natam ulāvu naḷi nīrvayiṉ aḻunta navai tīr
atavam āy naṟu ney uṇṭu ulakil aṉpar karutiṟṟu
utavu cēvaṭiyiṉāl amalaṉ untutalumē.