கம்பராமாயணம் 2636 · ஆரணிய 1.45

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பட்ட தன்மையும் உணர்ந்து - அங்ஙனம் தான் மண்ணில் புதைக்கப் பட்ட தன்மையை அறிந்து; முன்படர் சாபம் இட - முன் (குபேரனால்) பற்றிய சாபம் இட்டதால்; கட்ட வன் பிறவி தந்த - கொடிய அரக்கப் பிறவி கொடுத்த; கடைஆன உடல்தான் விட்டு - கீழான இழிந்த உடம்பை நீக்கி; ஓர்முட்டை தந்து - இரண்யகருப்பம் எனும் முட்டையை உண்டாக்கி; அதனில் வந்த விரிஞ்சன் என முன்னவனின் - அதிலிருந்து தோன்றிய பிரமன் எனும் முதல்வன்போல்; விண்ணிடை விளங்கினன் -(விராதன் தன் முன்னைய கந்தருவ உருவில்) வானில் தோன்றினான். ஏ-ஈற்றசை

அண்டத்தில் பிரமன் தோன்றியது போல வானில் விராதன் தோன்றினான். சாபம் பெற்றதைக் “கரக்க வந்த” (2580) என்ற இப்படலப் பாடல் பின்னர்க் கூறும். விரிஞ்சன் -அன்னப்பறவையால் தாங்கப் பெறுபவனாம் பிரமன். பட்ட தன்மை உணர்தல் என்பது முன் பிறவிஞானம் பெறல். பிறவித் துன்பம் தன்னைப் பற்றியும், பிற உயிர் பற்றியும் தெய்வத்தைப்பற்றியும் வருவன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing too what had befallen him, the curse laid on him long ago now spent,
  2. he left the lowly body that a cruel birth had given him
  3. and shone forth in the sky, like the First, the eldest,
  4. Viriñcaṉ, who came from the egg he himself had made.

What the poem says

Touched by Irāmaṉ's foot, Virātaṉ is released from a curse laid on him long ago, which had made him a demon. He sheds that lowly body and appears shining in the sky in his former celestial form, like Piramaṉ emerging from the cosmic golden egg at the start of creation. He also regains knowledge of his former life; the story of the curse comes in a later verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭṭa taṉmaiyum uṇarntu, paṭar cāpam iṭa muṉ
kaṭṭa vaṉ piṟavi tanta kaṭai āṉa uṭaltāṉ
viṭṭu, viṇṇiṭai viḷaṅkiṉaṉ; viriñcaṉ eṉa ōr
muṭṭai tantataṉil vanta mutal muṉṉavaṉiṉē.