கம்பராமாயணம் 2637 · ஆரணிய 1.46

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொறியின் ஒன்றி - ஐம் பொறிகளின் வயத்தில் சிக்கி; அயல் சென்று திரி - புறத்தே உள்ள பொருளுணர்வில் ஈடுபட்டு அலைய; புந்தி உணரா - புத்தியால் அறிய முடியாத; நெறியின் ஒன்றி - நல்வழியில் ஈடுபட்டு; நிலைநின்ற நினைவு உண்டதனினும் - நிலைபெற்று நின்ற எண்ணம் உண்டானதாலும், பிறிவு இல் அன்பு - பிரிதல் இல்லாத பக்தி; பண்டு நனி உடைய பெற்றி தனினும் - முன் மிகக்கொண்டிருந்த தன்மையாலும்; அறிவு வந்துதவ - உண்மை ஞானம் வந்து துணை செய்வதாய்த் தூண்ட; நம்பனை அறிந்து பகர்வான் - தலைவனாம் இராமனை (ப்பரம் பொருள் என) உணர்ந்து துதி செய்வான்.

ஐந்து பொறிகளில் சிக்குண்ணாமல் புத்திநிலை பெற்று நல் வழிப்பட்டு முன்வினை துணைசெய்ய இறையருள் கூடியது. இராமன் திருவடி தீண்டப் பெற்றதால் விராதனைப் பற்றிய தீவினைகள் நீங்கின. பழவினை நீங்க ஞானம் கைகூட இராமனைப் பரம்பொருள் என உணர்ந்து துதிப்பானாயினான். பொறிகள் மெய் வாய் கண் மூக்கு செவி என ஐந்தாம். பிறிவு - பிரிவு, செய்யுள்விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Through the thought that stood firm, fixed on a path the mind cannot know
  2. while bound to the senses and roaming after outer things,
  3. and through the nature that was his of old, a love that never left him,
  4. understanding came to his aid, and knowing the Lord, he spoke.

What the poem says

Freed of his sins by the touch of Irāmaṉ's foot, the former demon's old devotion and steady mind return, and true knowledge dawns. He recognises Irāmaṉ as the Supreme Being, beyond the reach of a mind that is caught by the five senses, and begins to praise him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟiyiṉ oṉṟi ayalceṉṟu tiri punti uṇarā
neṟiyiṉ oṉṟi nilai niṉṟa niṉaivu uṇṭataṉiṉum,
piṟivu il aṉpu naṉi paṇṭu uṭaiya peṟṟitaṉiṉum,
aṟivu vantu utava, nampaṉai aṟintu pakarvāṉ.