கம்பராமாயணம் 2638 · ஆரணிய 1.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் பாதங்கள்- வேதங்கள் சொல்கின்ற எல்லா உலகங்களிலும் பரந்துள்ளன உன்னுடைய திருவடிகள்; இவை என்னின் படிவங்கள் எப்படியோ - இவைதாம் என்றால் உன் திருவடியின் மற்ற உறுப்புக்கள் எவ்வாறு அமைந்துள்ளனவோ?; ஓதம் கொள் கடல் அன்றி - நீர் கொண்ட கடல் அல்லாமல்; ஒன்றினொடு ஒன்று ஒவ்வாப் பூதங்கள் தொறும் உறைந்தால் - ஒன்றுக் கொன்று முரணாக உள்ள மற்ற பூதங்களில் நீ தங்கியிருந்தால்; அவை உன்னைப் பொறுக்குமோ - அப்பூதங்கள் உன்னைத் தாங்கும் வலிமையுடையன ஆகுமோ? (ஆகா).
“வேதங்கள் ஒலிக்கின்ற” “வேதங்கள் துதிக்கின்ற” எனவும் கூறுவர் திருவடி உலகெங்கும் பரந்தது திரிவிக்கிரமனாக வாமனாவதாரத்தில் கண்டதாம். ஓதம் - குளிர், ஒலி எனவுமாம். ஐம்பூதங்களாவன, நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், பூதங்கள் வன்மை மென்மை, தட்பம் வெட்பம், உரு அரு எனப் பல்வேறு முரண்பாடு கொண்டவை. 'படிவங்க'ளில் கள் என்பதை அசையாக்கி வடிவம் எனவும் கூறுவர் எப்படியோ - ஐயப்பொருளில் வந்த ஓகாரம். பொறுக்குமோ - எதிர் மறைப்பொருளில் வந்த ஓகாரம். விராதன் துதிபோல் இந்நூலில் இந்திரன், கவந்தன், பிரமன் துதிகளும் ஒப்பு நோக்கற்குரியன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If these feet of yours are what spread through all the worlds
- the Vedas proclaim, what then must your forms be!
- Save for the surging sea, if you dwelt in the elements,
- each at odds with the other, could they bear you?
What the poem says
Virātaṉ's hymn to Irāmaṉ begins. If his feet alone filled all the worlds, as they did when he took three strides as Vāmaṉaṉ, how can anyone imagine the rest of his form? Only the ocean, where he reclines, can hold him; the other elements, which are at odds with one another, hard and soft, hot and cold, could not bear him. The poet gives similar hymns to Intiraṉ, Kavantaṉ and Piramaṉ elsewhere.