கம்பராமாயணம் 2639 · ஆரணிய 1.48

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடுத்த கராம் கதுவ - கோபித்த முதலை (தன் காலைப்) பற்றிக் கொள்ள; ஒருவாரணம் உறுதுயரால் நிமிர்கை எடுத்து -கசேந்திரன் என்னும் ஒரு யானை தனக்கு ஏற்பட்ட மிக்க துன்பத்தால் துதிக்கையை மேலே தூக்கி எடுத்துக் கொண்டு; மெய்கலங்கி உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள - உடல் தளர்ந்து சூழ்ந்த திக்குகளில் எல்லாம் தான் பிளிரும் ஒலி சென்றடைய, அடுத்த பெரும்தனி மூலத்து அரும்பரமே! பரமே! - எல்லாப் பொருள்களிலும் சென்று தங்கும் பெருமைமிக்க மூலப் பொருளான அறிய பரம் பொருளே! பரம் பொருளே!; என்று எடுத்து அழைப்ப - என்று குரலெடுத்துக் கூப்பிட; நீயோ அன்று “ஏன்” என்றாய் - நீ தானே அன்று “ஏன்” எனக் கேட்டு அதன் பக்கம் சென்று துயர் நீக்கிக் காப்பாற்றினாய்?

இராமன் பரம் பொருள் என்பது இதில் குறிப்பிடப் பெறுகிறது. உடுத்த திசை - உலகம் தன்னைச் சுற்றி ஆடையாக அணிந்த திக்குகள் யானை அழைத்த கதை : பாண்டிய மன்னன் இழைத்த பிழையால் அகத்தியர் அவனை யானையாகச் சபித்தார். அது நாளும் ஆயிரம் தாமரை மலரைக்கொண்டு திருமாலுக்குப் பூசை செய்து வந்தது. தேவலன் என்ற முனியிட்ட சாபத்தால் கந்தருவன் ஒருவன் முதலையாய்க் கிடந்தான். அக்குளத்தில் மலர் பறிக்க வந்த யானையை முதலை பற்றிடப் பல்லாண்டு காலம் அது வருந்தி இறுதியில் “ஆதிமூலமே” என அழைக்க உடனே திருமால் கருடன் மேல் வந்து ஆழிப்படையால் முதலையைத் துணித்து யானையை முதலை வாயிலிருந்து விடுவித்தார் யானை மோட்சமும் முதலை பொன்னுலகமும் சேர்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When a fierce crocodile seized him, and, lifting his trunk high, shaken in body,
  2. his cry spreading through all the quarters that clothe the world, in his great pain,
  3. 'O rare Supreme, great sole Root of all! Supreme!'
  4. an elephant raised his voice and called, was it not you who answered then, 'What is it?'

What the poem says

Virātaṉ recalls the story of the elephant king Kacēntiraṉ. Seized by a crocodile in a lotus pool, the elephant lifted his trunk and cried out to the 'Original Root', and Tirumāl came at once on Garuḍa, cut down the crocodile with his discus and set the elephant free.

The commentary gives the background: the elephant was a Pāṇṭiya king cursed by Akattiyar, who still worshipped Tirumāl daily with a thousand lotuses, and the crocodile was a cursed celestial. Both were released. By recalling this, Virātaṉ declares that Irāmaṉ is that same Supreme God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭutta karām katuva, nimir kai eṭuttu meykalaṅki
uṭutta ticai aṉaittiṉum ceṉṟu oli koḷḷa, uṟu tuyarāl
'aṭutta perun taṉi mūlattu arum paramē! paramē! 'eṉṟu
eṭuttu, oru vāraṇam aḻaippa, nīyō aṉṟu'ēṉ? 'eṉṟāy.