கம்பராமாயணம் 2641 · ஆரணிய 1.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் - இறத்தல் பிறத்தல் என்று கூறும் திருவிளையாட்டில் நன்கு மகிழ்ந்து ஈடுபட்டவனே!; துறப்பதே தொழிலாகத் தோன்றினோர் தோன்றியக்கால்- உலகப்பற்றை நீக்குதலையே தம் செயலாகக்கொண்ட ஞானியர் ஒரு கால் பிறந்தால்; தம்மை மறப்பரோ - தம் இயல்பை மறப்பார்களோ (மாட்டார்கள்); அது அன்றாகில் - அது அவ்வாறு அல்லாவிடில், மற்று அவர் போல் பிறப்பரோ - அவர் பிறர் போல் பிறப்பு எடுப்பாரோ (மாட்டார்); எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ -அவ்வாறு துறந்தவர்க்கும் அவர்கள் அடைந்த நற்பேறு பெறுதல் அரிதே ஆகும்.
விளையாட்டு, மிகுந்த முயற்சி இல்லாமல் எளிதில் செய்வது - மாய விளையாட்டு என்பார் பின்னரும் (2569). இறப்பதும் பிறப்பதும் செய்யும் மானிட வடிவில் வந்து அவதாரம் செய்தனன் என்பர் சிலர். பரமபதத்தை அடைதல் துறவியர்க்கு மட்டுமின்றி இறைவன் பதம் அடைந்தவர்க்கும் எளிது என்பதாம். இறப்பதே, பிறப்பதே- எண்ணுப் பொருளில் வந்த ஏகாரங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When those born with renunciation as their only work are born,
- will they forget what they are? And if not, will they
- be born as others are? Is the state they reached hard for anyone to reach?
- O you who delight in the sport called dying and being born!
What the poem says
Virātaṉ's praise continues. Irāmaṉ is addressed as one who plays at dying and being born, taking human births as a game. If even renouncers who are reborn do not forget their nature, how much less does he; and the supreme state the renouncers win is not hard to reach for anyone who comes to his feet.