கம்பராமாயணம் 2642 · ஆரணிய 1.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பனிநின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும்புணை பற்றி -அச்சம் தரும் பிறவியாகிய பெரிய கடலை நீந்திச் செல்லுதற்குத் தெப்பமாகக் கைக் கொண்டு; நனிநின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன - மிகுதியாய் நின்ற எல்லாச் சமயமக்களும் (தத்தம் கடவுளைப் பற்றுவது) நல்லதென்று சொல்ல; தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீ ஆகின் -ஒப்பற்று விளங்கும் மெய்ப்பொருளின் பெருங் கடவுளாகிய பரம்பொருள் நீயாக இருக்கும் நிலையில்; இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு என் செய்வாரோ - இனிமேல் உறுதி கொள்ள நின்ற தலைமைத் தெய்வங்கள் என்ன பெருமையைக் கொண்டு எதைச்செய்வார்கள்?
இதில் இராமனே ஒப்பற்ற கடவுள் அவனே பிறவிப் பெருங்கடலை நீந்தப் புணையாவான் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (குறள். 10) இங்கு எண்ணுதற்குரியது. பிற சமயம் கூறும் தெய்வங்கட்கு இத்தகைய சிறப்பு இல்லை என்பதாம். பனி நின்ற குளிர்ச்சி பொருந்திய (கடல்)எனவும் ஆம். காரண காரியத் தொடர்ச்சியாய் வருதலால் பிறவிக் கடல் என்றார் பிறவிக் கடல் கடத்தல் - பிறவி அறுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Clinging to rafts to cross the great sea of births, a sea of dread,
- as all the many faiths, holding fast, say, 'Ours is good,'
- if you are the great form of the one Truth that stands alone,
- what then will the other first gods have to hold, and what will they do?
What the poem says
Every religion offers its own god as the raft to cross the ocean of rebirth, a figure the Tirukkuṟaḷ also uses. But if Irāmaṉ is the one supreme reality, Virātaṉ asks, what greatness is left for the other gods, and what can they do?