கம்பராமாயணம் 2643 · ஆரணிய 1.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தருமத்தின் தனி மூர்த்தி - அறத்தின் ஒப்பற்ற வடிவான இராமனே!; ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி மாயாத வானவர்க்கும்- படைத்தல் தொழில் ஓய்வில்லாத் தாமரை மலர் மேல் அமர்ந்த பிரமனே முதலாக உள்ள அழிவில்லாத் தேவர்களுக்கும்; மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் - அத்தேவரல்லாத உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கும்; நீ ஆதி முதல்தாதை - நீயே முதன்முதலில் தோன்றிய தந்தை ஆவாய்; நெறிமுறையால் ஈன்று எடுத்த தாய் ஆவார் யாவரோ? - நெறிப்படி பெற்றெடுத்த அன்னையாய் உள்ளவர் யார்? (நீயே எல்லாவற்றையும் பெற்றெடுத்த தாய் ஆவாய்)
பிரமன் முதலிய தேவர்க்கும் உயிர்களுக்கும் தந்தை தாய் என்பவர் திருமாலே. தேவர் இறவாததற்கு அமுத முண்டமை காரணமாம். இனி, 'நின்தேவி யாம் திருமகளே தாய்' எனவும் கொள்ளலாம். கற்பங்கள் தோறும் பல பிரமர்கள் தோன்றுவதால் 'ஓயாத மலர் அயன்' எனவும் கூறுவர். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன் அயன். உடம்பு அழியினும் உயிர் அழியாததால் 'மன்னுயிர்' எனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the deathless gods who came to be, with Ayaṉ of the never-resting flower first among them,
- and to all the other abiding lives,
- you are the first father, the origin; who, then, could be the mother
- who bore them in due order? O sole form of dharma!
What the poem says
Irāmaṉ, the embodiment of dharma, is father of all, from Piramaṉ, who sits on the lotus growing from Tirumāl's navel, to every living creature. And who but he is also their mother? Another reading takes the mother to be his consort Tirumakaḷ. The lotus is 'never resting' because a new Piramaṉ arises in every age.