கம்பராமாயணம் 2644 · ஆரணிய 1.53

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதி பரம்பரமும் நீ - முதன்மையான மேலாம் கடவுளும் நீயே; உலகங்கள் நின்னவே - எல்லா உலகங்களும் உனக்குரியனவே; ஆயாத சமயமும் நின் அடியவே- ஆராய்ந்து அறிய முடியாத மதங்கள் உன்னைக் காரணமாய்ப் பற்றியவையே, அயல் இல்லை - வேறு இல்லை (அவ்வாறு இருக்கவும்) தீயாரின் ஒளித்தி- வஞ்சகர் போல் மறைந்துள்ளாய், வெளி நின்றால் தீங்குண்டோ- யாவரும் அறிய வெளிப்படையாய்த் தோன்றினால் தீமை உண்டாகுமோ? வீயாத பெருமாய விளையாட்டும் வேண்டுமோ? - அழியாத பெரிய மாயையாக இத்திருவிளையாட்டும் செய்யவேண்டுமா? ஆல் - அசை

பரம்பரம் - மேலானவற்றுள் மேலானது, உன்னை ஆராயாத சமயங்களும் இறுதியாக அடைவது உன் திருவடியையே என்பதுமாம். தீயோர் போல் நீ மறைந்திருக்க ஒரு காரணமும் இல்லை. எனவே இம்மாயையாம் விளையாட்டு எதற்கு என்பார் தீயாரின் என்பது பழிப்பது போலப் புகழ்வதாம். தீயவரின் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்துள்ளாய் என்பர் சிலர். வீயாத பெருமாய என்பதற்கு அழியாத மாயனே என்பதுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are the First, the Highest of the high; the worlds are yours alone;
  2. even the faiths that do not seek you belong to your feet; there is nothing besides;
  3. yet you hide yourself like the wicked; would harm come if you stood in the open?
  4. Must there be this great, unending play of illusion as well?

What the poem says

All worlds and all religions, even those that do not look for him, finally lead to Irāmaṉ's feet. Why then does he hide like a wrongdoer? The reproach is praise in disguise, a figure Tamil poetics calls praise by blame. Some take it to mean that he stays hidden from the eyes of the wicked.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nī āti paramparamum; niṉṉavē ulakaṅkaḷ;
āyāta camayamum niṉ aṭiyavē; ayal illai;
tīyāriṉ oḷittiyāl, veḷi niṉṟāl tīṅku uṇṭō?
vīyāta peru māya viḷaiyāṭṭum vēṇṭumō?