கம்பராமாயணம் 2645 · ஆரணிய 1.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாராதே வரவல்லாய் - (அடியார்க்கு) வருதற்கு அரியார் போலிருந்து மிக எளியார்போல் வரும் வல்லமை உடையானே; தாய் தன்னை அறியாத கன்று இல்லை - தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை; தன் கன்றை ஆயும் அறியும் - (அதுபோல்) தாயும் தன் கன்றை அறிந்துகொள்ளும்; ஐய! - தலைவனே!; உலகின் தாய் ஆகின் எப்பொருளும் நீ அறிதி - எல்லா உலகங்களுக்கும் அன்னை ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்; அவை உன்னை நிலை அறியா - அப்பொருள்கள் உன் தன்மையை அறியாதுள்ளன; மாயை இது என் கொலோ? - இம்மாயச் சுழல் எதுவோ? (என்னால் அறிய முடியவில்லை).
வாராதே வரவல்லாய் என்பதை வந்தாய் போல வாராதாய் வாராதாய் போல் வருவானே என்ற பெரியார் திருவாய்மொழிப் பாசுரத்துடன் (60 : 9) ஒப்பிடின் மேலும் தெளிவு கிட்டும். தாய்தன்னைக் கன்றறிவதை நாலடியாரும் கூறும் (101). ஆயின் உயிர்களை நீ படைத்தாலும் அவை உன்னை அறியவில்லை. நீயோ எல்லாம் அறிந்தவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There is no calf that does not know its mother, and her calf
- the cow knows too; if you are the world's mother, my lord,
- you know every thing, yet they do not know your nature;
- what illusion is this? O you who can come without coming!
What the poem says
A calf knows its mother and a cow knows her calf, yet though Irāmaṉ is the mother of the world and knows every creature, his creatures do not know him. Virātaṉ calls him the one who comes without coming, seeming far off yet near to his devotees, a phrase the commentary compares with a hymn of the Vaiṣṇava saints.