கம்பராமாயணம் 2646 · ஆரணிய 1.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகம் - உலகமக்கள்; “பன்னல் ஆம்” என்று - துதிக்கலாம் என்று; பலபலவும் நினையும் - பல்வேறு தெய்வங்களை நினைப்பர்; (ஆனால்); உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே - உன்னைத் தவிர வேறு பெரிய கடவுள் உண்டெனக் கருதல் உயர்ந்த ஞானியரின் செயல் அன்று; அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர் மாட்டு - அன்ன வாகனமுடைய பிரமனை முதலாகக் கொண்ட அந்தணர்களால்; அருந்தெய்வம் நின் அலால் இல்லாமை -வழிபடும் அரிய கடவுள் உன்னை அல்லாமல் வேறு இல்லா உண்மையை; நெறிநின்றார் நினையாரோ? - பலசமய நெறிநின்றவர்கள் எண்ணிப் பாராரோ? (பிற நெறியில் சென்று உண்மை அறியாது உள்ளனர் என்ற குறிப்பைப் புலப்படுத்தும்)
பன்னுதல் - பல முறை கூறல். ஒழுக்கு - ஒழுக்கம், நடை, ஆசாரம். அந்தணர் - அழகிய தட்பத்தை உடையவர். ஆல், ஏ- அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They are worth praising,' the world says, and thinks of god after god;
- but to hold any great god other than you is not the way of the exalted;
- that for the Brahmins, first among whom is he who rides the swan, there is no rare god
- but you, will those who keep to their own paths not stop to think?
What the poem says
People praise many different gods, but the wise know there is none greater than Irāmaṉ. Even Piramaṉ, who rides the swan, and the Brahmins who follow him worship no other. Virātaṉ wishes the followers of other paths would reflect on this.