கம்பராமாயணம் 2647 · ஆரணிய 1.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திரு உறையும் மணிமார்ப! - திருமகள் தங்கிய அழகிய மார்பை உடையவனே!; பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்- ஒப்பில்லாத பிறமதங்கள் சிறப்பித்துக் கூறும் தெய்வங்கள்; இருவினையும் உடையார்போல் - நல்வினை தீவினை என்பவற்றைக் கொண்ட எளிய மக்கள் போல; அருந்தவம் நின்று இயற்றுவார் - செயற்கரிய தவம் செய்கின்றவர் ஆவார்; நினக்கு என்னை செயற்பால? - உனக்குச் செய்ய வேண்டிய தவம் என்ன உள்ளது? (ஒன்றுமில்லை) (ஆயினும்); உறங்காதாய்- தூக்கமின்றி விழிப்பு நிலையில் உள்ளவனே! ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் - எந்த ஒரு செயலும் இல்லாதவர் போலத் தூங்குகிறாய். ஆல் ஈரிடத்தும் அசை.
'இருள்சேர் இருவினை' (குறள். 5) என்ற குறளடியை ஒப்பு நோக்க இடமுளது. மற்ற சமயத்தெய்வங்கள் தவம் செய்வதால் அவர்கள் இருவினைப்பட்டவர் ஆவர் எனவே அவர்கள் பரம்பொருள் ஆகார். மணிமார்பு என்பதைக் கவுத்துவமணி அணிந்த மார்பு எனவும் கூறுவர். உறக்கம் - அறிதுயில் யோக நித்திரை, உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை (5: 4: 11) என்பது ஆழ்வார் பாசுரம். திருமாலுக்கு ஒருவினையும் இல்லை என்பது பெறப்படும். பிற தெய்வம் புரியும் தவம் போன்றது அன்று யோக நித்திரை. போல் - இரண்டிடத்தும் ஒப்பில் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods proclaimed by the many faiths that none can match
- perform hard penances, as though bound by both kinds of deeds;
- O you of jewelled breast where Tiru dwells, what is there for you to do?
- You sleep as though you had no deed at all, you who never sleep!
What the poem says
The gods of other faiths perform penance, like ordinary beings caught in good and bad karma, which shows they are not supreme. Irāmaṉ, on whose breast the goddess Tirumakaḷ lives, has nothing to achieve. His sleep on the ocean is not real sleep but yogic, wakeful sleep, as one of the Āḻvār saints also sings.