கம்பராமாயணம் 2648 · ஆரணிய 1.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திரு ஆன நிலமகளை - அழகிய பூ தேவியை; அரவு ஆகிச் சுமத்தியால் - ஆதிசேடன் எனும் பாம்பாகித் தாங்கி நிற்கிறாய்; அயில் எயிற்றின் ஏந்துதியால் - (வராக அவதாரத்தில்) கூரிய உன் பல்லில் தாங்கியுள்ளாய்; ஒரு வாயில் விழுங்குதியால் - (ஊழிக்காலத்தில் அப்பூமியை) ஒரே வாயில் முழுதும் விழுங்குகின்றாய், ஓர் அடியால் ஒளித்தியால் - திரிவிக்கிரமனாகி ஒரு திருவடிக்குள் மறைத்துள்ளாய்; மரு ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் - மணம் நிறைந்த திருத்துழாய் மாலை உடைய நின் அழகிய மார்பில் தங்கியுள்ள திருமகள்; இஃது அறிந்தால் சீறாளோ? - இச் செய்திகளை அறிந்தால் உன்மேல் ஊடல் (பெருங் கோபம்) கொள்ளமாட்டாளா? (கொள்வள்)
திருமால் அரவானது புராணமரபு. 'நாகர்களிடை நான் அனந்தன்' என்பது பகவதீ கீதை (10.29). மணிமார்பு - நீலமணி போல் ஒளிவீசும் மார்பு எனலுமாம். தலைவன் பிற பெண்பால் சேரின் தலைவி சீறுவது அகப்பொருளில் விரித்துரைக்கப் பெறும். சுமத்தியால், ஏந்துதியால், விழுங்குதியால், ஒளித்தியால் என நான்கு 'ஆல்'களும் அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the serpent you bear her, on your sharp tusk you lift her,
- in a single mouth you swallow her, under one foot you hide her,
- lovely Earth-woman; if she learned of this, would she not be angry,
- she who dwells on your jewelled breast with its fragrant tulasi garland?
What the poem says
A playful verse. Tirumāl keeps embracing the Earth goddess: he bears her as the serpent Ātiśēṣaṉ, lifts her on his tusk as the Boar, swallows her at the end of the age, and covers her with one foot as Trivikrama. Would not Tirumakaḷ, who lives on his breast, be jealous if she knew? The poet borrows the convention of love poetry in which a wife sulks over her husband's other loves.