கம்பராமாயணம் 2649 · ஆரணிய 1.58

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயா! - தலைவனே !; நீ விதித்த மன்னுயிர்கள் - நீ படைத்த நிலை பெற்ற உயிர்கள்; மெய்யைத்தான் சிறிது உணர்ந்து - நீயே பரம்பொருள் என்ற உண்மையை ஓரளவு தெரிந்து; உய்யத் தான் ஆகாதோ -நற்கதி அடைவது என்பது தான் முடியாதோ?; உனக்கு என்ன குறை உண்டோ - (அவ்வாறு அவை உய்தி பெற்றால் அதனால் உனக்கு எக்குறை ஏற்படும்?; மழுவாளிக்கு அன்றளித்த ஐயத்தால் - கோடரிப் படையைக் கொண்ட சிவனுக்கு முன்னர் இட்ட பிச்சையால்; வையத்தார் வானத்தார் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் - மானிடரும் தேவரும் பரம்பொருள் யார் என்று எண்ணிய சிறிது சந்தேகத்தையும் நீக்கினவர்களும் உண்டு. சிவன் பிரமனின் ஐந்தாம் தலையைக் கொய்ய அது அவன் கையில் ஒட்டிக் கொள்ள அப்பிரமகபாலத்தில் திருமால் பிச்சையிடச் சிவன் அது நீங்கி உய்ந்தான் என்பது புராணம். ஐயத்தால் ஐயம் நீங்கியது. தான் -அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Could not the abiding lives you created, grasping the truth a little,
  2. be saved? Would you lose anything by it?
  3. Of those on earth and in heaven, some were freed of a little of their doubt
  4. by the alms you once gave to the bearer of the axe, my lord!

What the poem says

Virātaṉ asks why Irāmaṉ does not let his creatures know a little of the truth and be saved, since it would cost him nothing. He recalls a Purāṇic story: when Civaṉ cut off Piramaṉ's fifth head, the skull stuck to his hand until Tirumāl dropped alms into it and set him free. The verse puns on aiyam, which means both alms and doubt: the alms cleared some people's doubt about who is supreme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1meyyait tāṉ ciṟitu uṇarntu nī vititta maṉṉuyirkaḷ
uyyattāṉ ākātō? uṉakku eṉṉa kuṟai uṇṭō?
vaiyattār vāṉattār maḻuvāḷikku aṉṟu aḷitta
aiyattāl ciṟitu aiyam tavirntārum uḷar. aiyā!