கம்பராமாயணம் 2651 · ஆரணிய 1.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! - சிறிதும் ஒப்பு வேறு பெற முடியாத பொருளே; முன் உவந்து உறையும் - முன்னே மனம் விரும்பிப் பள்ளி கொண்ட; அப்பு உறையுள் துறந்து - திருப்பாற்கடலாம் இருப்பிடத்தை விட்டு நீங்கி; அடியேன் அருந்தவத்தால் -அடியவன் முன் செய்த அரிய தவப்பேற்றால்; அணுகுதலால் இப்பிறவிக் கடல் கடந்தேன் - நீ எனக்குக் காட்சியளிக்க வந்ததால் என் இழிபிறப்பாம் கடலை விட்டுப் பிழைத்தேன்; இனிப் பிறவேன் - இனி மறுபடியும் பிறக்க மாட்டேன்; இருவினையும் - என் நல்வினை தீவினைகள் எல்லாம், துப்புறழும் நீர்த்த - பவளம் போன்ற செந்நிறம் கொண்ட; சுடர்த் திருவடியால் - நெருப்பு போன்ற உன் திருவடியால்; நீ துடைத்தாய் - நீ போக்கி அருளினாய்.
இராமன் தன் திருவடிகளால் உதைத்துப் பள்ளத்தில் தள்ளிய பொழுது 'திருவடியால் துடைத்தாய்' எனப் போற்றுகிறான் விராதன். அப்பு - நீர் நீராலாகிய கடல், ஆகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- O One for whom no likeness can be found at all! Leaving the watery dwelling
- where you gladly lay of old, since you came near through this servant's hard penance,
- I have crossed this sea of birth; I shall not be born again; both my kinds of deeds
- you have wiped away with your shining feet, red as coral.
What the poem says
Virātaṉ closes his hymn. Irāmaṉ left his bed on the ocean of milk and came to him as the reward of his past penance. By the touch of those coral-red feet, which pushed him into the pit, both his good and his bad karma have been wiped out, and he will never be born again.