கம்பராமாயணம் 2663 · ஆரணிய 1.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கைகொள் காலவேலினார்- கையில் ஏந்திய யமன் போல் கொடிய வேலையுடைய இராமலக்குவர்; மெய்கொள் வேத மெய்யர்வாழ் மொய் கொள் சோலை முன்னினார்- மெய்யாகிய வேதமே வடிவெடுத்த தவமுனிவர் வாழ்கின்ற மரங்கள் அடர்ந்த சோலையை அடைந்தனர்; வைகலானும் வைகினான் - நாளின் தலைவனாம் பகலவனும் மறைந்தான்.
வைகல் - பகல், வைகலான் பகலவன் என்ற பொருளில் சூரியனைக் குறித்தது. வேல் -படைகளின் பொதுப் பெயராய் வந்தது. பகைவர் உயிரைக் கவர்வதால் வேல் யமனுக்கு ஒப்பாம். வாழ்வோர் காலத்தை வரையறுப்பவன் ஆதலால் காலன் எனப்பட்டான் யமன். வேத விதிப்படி கருமங்களைத் தவறாது செய்பவர் ஆதலின் வேத மெய்யர் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They whose hands held spears like Death
- drew near the dense grove where dwell the true ones
- of the Veda, truth made flesh;
- and the lord of the day, too, went to his rest.
What the poem says
The chapter of Virātaṉ's slaying ends. Irāmaṉ and Ilakkuvaṉ, whose weapons take life like Yama, reach a thick grove where sages live who follow the Veda's rules without fail, and the sun sets.