கம்பராமாயணம் 2665 · ஆரணிய 2.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செவ்வேலவர் சென்றனர் - சிவந்த வேலினைக் கொண்ட இராமலக்குவர் அவ்வழியே போயினர்; சேறல் உறும் அவ்வேலையின்- சென்று அடையும் அப்பொழுதில்; தவ்வாது இரவும் பொலி தாமரையின்- கூம்பாமல் இரவிலும் மலர்ந்துள்ள தாமரை மலர்கள் போல, வெவ்வேறு அலர் ஆயிரமாம் கண்ணினன் - தனித்தனியே மலர்ந்து விளங்கும் ஆயிரம் கண்களை உடையவனாம்; விண்ணவர் கோன் எய்தினன்- தேவர் தலைவனாம் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.
செவ்வேல் - சிறந்த வேலுமாம். வேல் என்பது போர்க் கருவிகளுக்குப் பொது. வேலை -வேளை. இந்திரன் கண்கள் இமையாமல் இருப்பதால் இரவும் பொலி தாமரை உவமையாயிற்று. இதுஇல்பொருளுவமை - வெவ்வேறு அலர் கண் என்பது இந்திரனுக்குக் கௌதமமுனி சாபத்தால் உடலெங்கும் கண் பெற்றதைக் குறிக்கும். (472). தவ்வாது - தவறாமல் என்றும் உரைப்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heroes of red spears went on, and at the very time
- they were arriving there came, with a thousand
- eyes, each open apart like lotuses that bloom unfailing even by night,
- the king of the gods.
What the poem says
As the princes arrive, Intiraṉ, king of the gods, comes there too. His thousand eyes never close, so they are like lotuses that stay open even at night, a flower that does not exist. He received the eyes all over his body through the curse of the sage Kautama.