கம்பராமாயணம் 2666 · ஆரணிய 2.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படிமேல்- தரை மீது; அயல் சூழ் - அருகிலுள்ள இடங்களில் சுற்றிலுமுள்ள; அன்னச் செலவின் - அன்னம் போன்ற நடையுடைய; பொன்னின் பொலிவார் அணிபூண் ஒளிமேல்- திருமகள் போல் விளங்கும் தெய்வப் பெண்கள் அணிந்த நகைகளின் ஒளியின்மேல்; மின்னல் செறி கற்றை விரிந்தன போல் - மின்னல்களின் மிகுந்த கூட்டம் பரவியது போல்; பின்னிச் சுடரும் - கலந்து விளங்கும்; பிறழ் பேர் ஒளியான் - மிகுந்த சிறந்த ஒளி உடையவன் (இந்திரன்).
செலவு - நடை, பொன் - தேமலுமாம். மின்னலின் செறி கற்றை என்பது தெய்வப் பெண்களின் கூட்டத்திற்கு உவமை. இந்திரன் கருநிற முடையவன். ஆதலால் அவனை மேகத்திற்கு உள்ளுறையாகக் கொள்ளலுமாம். (2597)
ஆங்கிலம் · English translationAI
Translation
- With swan-gaited women about him on every side upon the ground,
- upon the light of the jewels worn by those who shone like gold,
- as though dense clusters of lightning had spread out,
- he blazed with a great, flickering, interwoven radiance.
What the poem says
Intiraṉ is surrounded by celestial women who walk like swans and glitter with jewels; their light flashes around him like massed lightning. Since Intiraṉ is dark-skinned, he himself can be seen as the cloud among the lightning.