கம்பராமாயணம் 2667 · ஆரணிய 2.4

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானில் பொலி தோகையர் கண் மலர் வான்
கானில் படர் கண் களி வண்டொடு , தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான் .

பொருள் · Meaning in Tamil

வானில் பொலி தோகையர் - தேவர் உலகில் விளங்கும் மயில் போன்ற தேவ மகளிரின்; கண்மலர் வண்கானில்- கண்களாம் வளப்பமுடைய பூக்கள் பூத்த காட்டில்; படர் கண்களி வண்டொடு - படர்ந்துசெல்லும் தன் கண்களாம் மயக்கமுற்ற வண்டுகளோடு; தார் மேனித் திரு நாரதன் - மாலை அணிந்த திருமேனியும் திருவினையுமுடைய நாரதமுனிவன்; வீணை இசைத் தேனில் - மகதி எனும் வீணையில் எழும் இசையாகிய தேனிடத்து; படியும் செவி வண்டு உடையான் -தோயும் செவிகளாம் வண்டுகளை உடையவனாம் இந்திரன்.

வண்டுகள் மலர் வனத்தில் மொய்ப்பது போல் தெய்வ மகளிரைத் தன் ஆயிரம் கண்களால் கண்டுகளித்தும், வண்டு தேன் பருகி இன்புறல் போல் நாரத வீணை இசையினைக் கேட்டு மகிழ்ந்தும் இருந்தனன் இந்திரன் - இது உருவக அணி. கண்வண்டோடு செவி வண்டும் உடையவனாம். நாரதர் எனின் ஆன்ம ஞானம் அளிப்பவன், நரர்களுக்குள்ள ஒற்றுமையைப் பிளப்பவன், அன்பை அருள்பவன் என்றும் பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the rich forest of flower-eyes of the peacock-like women who shine in heaven
  2. roamed the drunken bees of his eyes; and his ears were bees that, in the honey
  3. of the music of the vīṇā of holy Nāratan,
  4. garlanded in body, bathed.

What the poem says

A sustained metaphor. The eyes of the heavenly women are a forest of flowers, and Intiraṉ's thousand eyes are bees roaming among them in delight. His ears are bees too, drinking the honey of the music that the sage Nāratan plays on his vīṇā.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉil poli tōkaiyar kaṇmalar vaṇ
kāṉil paṭar kaṇ kaḷi vaṇṭoṭu, tār
mēṉit tiru nārataṉ vīṇai icait
tēṉil paṭiyum cevi vaṇṭu uṭaiyāṉ.