கம்பராமாயணம் 2668 · ஆரணிய 2.5

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனையின் துறை ஐம்பதொடு ஐம்பது நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் , முது தேவரின் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான் .

பொருள் · Meaning in Tamil

அனையின் துறை நூல் வினையின் - வேள்வித் தீயிடத்து சாத்திரங்களிற் கூறிய செயலின்படி; ஐம்பதொடு ஐம்பதும் தொகைவேள்வி நிரப்பிய மா முனைவன் - நூறு எனும் தொகை கொண்ட அசுவமேத யாகங்களைச் செய்துமுடித்த பெருமை வாய்ந்த தலைவன்; முது தேவரில் மூவர் அலார் - பழமையான தேவர்களில் பிரமன், திருமால், சிவன் எனும் மூவர் அல்லாத மற்றைய தேவர்கள் யாவரும், புனையும் முடி துன்று பொலங்கழலான் - தரித்துள்ள கிரீடங்கள் படிவதான பொன்னால் அமைந்த வீரக் கழலை அணிந்தவன் (இந்திரன்).

நூறு யாகங்களை முடித்தவன் என்பதால் இந்திரனைச் சதமகன் என்பர். இந்திரன் மூவர்க்கு அடுத்தவன். அனை - அனல். எதுகை நோக்கித் திரிந்தது. துறை - ஏழாம் வேற்றுமை உருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the fire, by the rites the books prescribe, fifty and fifty
  2. sacrifices, the full count, he had completed, the great
  3. lord; at his golden anklets the crowns worn by the ancient gods, all but the Three,
  4. press thick together.

What the poem says

Intiraṉ earned his place by completing a hundred horse sacrifices, which is why he is called Catamakaṉ, 'he of the hundred sacrifices'. All the gods except the supreme three, Piramaṉ, Tirumāl and Civaṉ, bow their crowned heads at his feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyiṉ tuṟai aimpatoṭu aimpatu nūl
viṉaiyiṉ tokai vēḷvi nirappiya mā
muṉaivaṉ, mutu tēvaril mūvar alār
puṉaiyum muṭi tuṉṟu polaṅ kaḻalāṉ.