கம்பராமாயணம் 2669 · ஆரணிய 2.6

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செம்மா மலராள் நிகர் தேவியொடும் - சிவந்த பெரிய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைப் போன்ற தன் மனைவியாம் சசியுடன்; மும்மா மத வெண்நிற முன் உயர் தாள் வெம்மா மிசையான் -மூன்று பெரியமதப்பெருக்குடையதும் வெள்ளை நிறமுடையதும் உயரமான முன்னங்கால்களை உடையதுமான அச்சமூட்டும் ஐராவதம் எனும் யானை மேல் வரும் இந்திரன்; விரி வெள்ளி விளங்கு அம்மா மலை அண்ணலையே அனையான் - ஒளி பரந்த வெள்ளி போல் திகழும் அந்தப் பெரிய கைலை மலைமேல் (உமையுடன் விளங்கும்) சிவனை ஒத்திருப்பவன்.

மும்மதம் - கன்னமதம், கபோல மதம், பீசமதம் என்பன. இந்திரன் தன் மனைவியுடன் ஐராவதயானை மேலிருப்பதற்குச் சிவன் உமையுடன் கயிலை மேல் வீற்றிருப்பது உவமை. யானைக்கு மலையை உவமிப்பது கவிமரபு. யானையின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட உயரமானவை. வெம்மா-மதம் பிடிப்பின் யானையின் உடல் வெப்பமாயிருத்தலைக் குறிக்கும். கொடுமையும் அழகும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With his queen, equal to her of the great red flower,
  2. white, with triple streams of rut, its forelegs high,
  3. seated on a fierce great beast, he was like the lord of that great mountain
  4. that shines with spreading silver.

What the poem says

Intiraṉ rides the white elephant Airāvatam with his queen Caci, who is as lovely as Tirumakaḷ. The pair on the elephant look like Civaṉ and Umā seated on silver Kailāsam; comparing an elephant to a mountain is a poetic convention. The elephant streams rut from three places, and its forelegs are taller than its hind legs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cem mā malarāḷ nikar tēviyoṭum
mum māmata veṇ niṟa muṉ uyartāḷ
vem mā micaiyāṉ, viri veḷḷi viḷaṅku
am mā malai aṇṇalaiyē aṉaiyāṉ.