கம்பராமாயணம் 2670 · ஆரணிய 2.7

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தான் நின்று , அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் ,
'யான் நின்றது என் ? 'என்று ஒளி எஞ்சிட , மா
வான் நின்ற பெரும் பதம் வந்து உருவாய்
மேல் நின்றென நின்று ஒளிர் வெண் குடையான் .

பொருள் · Meaning in Tamil

அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் - வெளியிடங்கள் எல்லாம் சென்று பரவி விளங்கும் குளிர்ந்த கதிர் வீசும் சந்திரன்; இன்றுயான் நின்றது என் என்று - இந்நாளில் நான் இவ்வுலகில் விளங்கி நிற்பதால் பயன் என்ன என்று எண்ணி, ஒளி எஞ்சிட - ஒளி குறையும்படி; மா வான் நின்ற பெரும் பதம் - உயர்ந்த விண்ணில் பொருந்திய பெரிய சுவர்க்கம்; உரு ஆய் வந்து - குடை வடிவாய் வந்து; மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் - தன் மேலே நின்றது எனச்சொல்லும்படி ஒளி வீசும் வெண்கொற்றக் குடையை உடையவன் (இந்திரன்); தான் -அசை.

சந்திரன் வெட்கப்பட்டுத் தன் ஒளி குறையுமாறு, பேரொளியுடன் சுவர்க்கமே குடையாக வந்தது என்பது தற்குறிப்பேற்ற அணி. சந்திரனினும் வெண்மை ஒளி உடையது குடை என்பது தொடர்புயர்வுநவிற்சியணி. இனிப் பெரும் பதம் என்பதற்குப் பெரும் சிறப்புடைய உணவாகிய தேவாமிர்தம் என்பர் சிலர். அமிர்தத்துடன் பிறந்த சந்திரன் அந்த அமிர்தமே இந்திரனின் குடையாக அமைந்ததால் இனித் தான் வானில் நின்று ஒளி பரப்புவது ஏன் என நாணித் தன் ஒளி குறைந்திட ஒளிமிக்க தேவ அமுதை வெண்குடையாக இந்திரன் பெற்றிருந்தான் என்பர். ஒளி - புகழும் ஆம். தான் என்பது சந்திரனைக் குறித்ததாகவும் கொள்வர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the cool-rayed moon, shining nearby on its own,
  2. thought, 'What use is my standing here?' and its light waned, as if the great
  3. realm that stands in the high sky had come in bodily form
  4. and stood above him, so shone his white parasol.

What the poem says

Intiraṉ's white royal parasol is so bright that it looks like heaven itself come down to stand over his head, and the moon, outshone, dims in shame, wondering why it bothers to shine. This is a poetic fancy assigning a motive to a natural event. Some take the 'great realm' to be the nectar of the gods, born with the moon from the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉ iṉṟu, ayal niṉṟu oḷir taṇ katirōṉ,
'yāṉ niṉṟatu eṉ? 'eṉṟu oḷi eñciṭa, mā
vāṉ niṉṟa perum patam vantu uru āy
mēl niṉṟeṉa niṉṟu oḷir veṇ kuṭaiyāṉ.