கம்பராமாயணம் 2671 · ஆரணிய 2.8

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திசை கட்டிய மால் கரி - எட்டுத்திக்குகளில் கட்டிய பெரிய எட்டு யானைகளின்; தெட்ட மதப் பசை - தெளிவான மதநீர்ப்பசையோடு, கட்டின - தொடர்புடையனவாக, கிட்டின பற்பல போர் -நெருங்கிய பலபல போர்களில்; விசை கட்டழி தானவர் - வேகமும் உறுதியும் அழிந்து தோற்றோடிய அசுரர்களினின்று; விட்டு அகல் பேர் இசை கட்டிய ஒத்து - நீங்கி ஓடும்படியாகப் புகழை நிலை நாட்டியவை போல்; இவர் சாமரையான் - மேல் எழுந்து விளங்கும் வெண் சாமரையை உடையவன் (இந்திரன்).

தெட்ட - முற்றிய என்றுமாம். எட்டுத்திசை யானைகளின் மதமாகிய பசை உடலில் பட்டுக்கட்டிப் போகும்படி அசுரர்களுடன் கிட்டின போர் எனலாம். இந்திரனுக்குத் தோற்றோடிய அசுரர் உடல் மீது திக்குயானைகளின் மதநீர் பட்டு வெண்மையாய் உறைந்து போயிற்று. சாமரைகள் வெற்றித் தூண்களுக்கு உவமிக்கப் பெற்றன. தானவர் - தனு என்பவளிடம் தோன்றிய மரபினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the great fame, caked with the thick rut-paste of the mighty elephants
  2. bound at the quarters, in the many battles fought at close quarters,
  3. that the Dāṉavas, their speed and strength broken, left behind as they fled,
  4. so rose the white yak-tail whisks that fanned him.

What the poem says

The white chowries waved over Intiraṉ look like the fame he won in close battles with the Dāṉavas, demons descended from Taṉu, when the rut-fluid of the elephants of the quarters dried white upon their fleeing bodies. Fame is white in Indian poetic convention.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ticai kaṭṭiya māl kari teṭṭa matap
pacai kaṭṭiṉa kiṭṭiṉa paṟpala pōr,
vicai kaṭṭaḻi tāṉavar viṭṭu akal pēr
icai kaṭṭiya ottu, ivar cāmaraiyāṉ.