கம்பராமாயணம் 2672 · ஆரணிய 2.9

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீர்வு இல் திரி செம் கதிர் தங்குவது ஓர்
ஊர் உற்றது எனப் பொலி ஒள் முடியான் ;
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான் .

பொருள் · Meaning in Tamil

தேரில் திரி செங்கதிர் தங்குவது - (ஒற்றைச் சக்கரமுள்ள தன்) தேரில் ஏறிச் செல்லும் சிவந்த கதிர்களுடைய சூரியன் தங்குவதான; ஓர் ஊர் உற்றது என - ஒரு பரிவேடம் இதுவாம் எனும்படி அமைந்த; பொலி ஒண் முடியான்- விளங்கும் ஒளிமிக்க கிரீடத்தை உடையவன்; போர் வித்தகன் - போர்செய்வதில் சிறந்தவன்; நேமி பொறுத்தவன் மா மார்வில் திருவின் - சக்கரப்படை ஏந்திய திருமாலின் பெருமை மிக்க மார்பில் வாழும் திருமகளைப் போல; பொலி மாலையினான்-விளங்கும் மாலை அணிந்தவன் (இந்திரன்).

தேரொளிக்குப் பரி வேடமும், கிரீடத்திற்குச் சூரியனும் உவமை ஆம். நேமி பொறுத்தவன் என இந்திரனையும் குறிக்கும் என்பர் ஏன் எனில் அவனுக்குச் சக்கிரி, நேமி என்ற பெயர்கள் உள்ளன. இந்திரன் மார்பின் மாலைக்குத் திருமால் மார்பில்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His bright, shining crown was as if a halo had formed
  2. where the red-rayed sun that roams in its chariot comes to rest;
  3. master of war, he wore a garland that shone like Tiru
  4. on the great breast of him who bears the discus.

What the poem says

Intiraṉ's crown glows like the halo around the sun, and the garland on his chest shines like Tirumakaḷ on the breast of Tirumāl, the bearer of the discus. Some read the discus-bearer as Intiraṉ himself, who also has that title. The printed commentary on this verse breaks off mid-sentence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēril tiri ceṅ katir taṅkuvatu ōr
ūr uṟṟatu eṉap poli oṇ muṭiyāṉ;
pōr vittakaṉ nēmi poṟuttavaṉ mā
mārvil tiruviṉ poli mālaiyiṉāṉ.