கம்பராமாயணம் 2673 · ஆரணிய 2.10

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செற்றிக் கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றித்திருவின் குளிர் வெண் நகை போல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான் .

பொருள் · Meaning in Tamil

செற்றி கதிரின் பொலி - பதிக்கப் பெற்றுக் கிரணங்களால் ஒளி வீசி நிற்கும்; செம்மணியின் சுடர்க்கற்றை - சிவந்த மாணிக்கங்களின் ஒளியின் தொகுதி; விட்டு எரி கஞ்சுகியான் - வெளி விட்டு ஒளி வீசும் மேல் அங்கி உடையான்; வெற்றித் திருவின் குளிர் வெண் நகை போல்- விசயலக்குமியின் குளிர்ந்த வெண்பற்களின் சிரிப்புப் போல்; சுற்றிக் கிளரும் சுடர்தோள் வளையான் - சுற்றி விளங்குகின்ற ஒளிவீசும் தோள் வளையங்களை உடையவன் (இந்திரன்).

செற்றி- ஒளி பெறச் செதுக்கி என்பர் சிலர். தோள் வளைகளை வெண்ணகைக்கு உவமையாக்கியதால் அவ்வணி முத்துக்கள் பதித்தவை எனலாம். தோள்வளையம் - வாகுவலயம் எனும் அணி. கஞ்சுகி - கவசம் என்பாருமுளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Set in it and shining with their rays, red rubies
  2. shot out clustered flames from the jacket he wore;
  3. and like the cool white smile of the goddess of victory,
  4. bright armlets gleamed all round his shoulders.

What the poem says

More of Intiraṉ's splendour. His jacket, or perhaps armour, is studded with rubies that throw out red light, and his armlets, likely set with pearls, shine white like the smile of the goddess of victory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟṟik katiriṉ poli cem maṇiyiṉ
kaṟṟaic cuṭar viṭṭu eṟi kañcukiyāṉ
veṟṟit tiruviṉ kuḷir veṇ nakaipōl
cuṟṟik kiḷarum cuṭar tōḷ vaḷaiyāṉ.