கம்பராமாயணம் 2674 · ஆரணிய 2.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல் ஆயிரம் மாமணி பாடம் உறும்- பல ஆயிரக்கணக்கான சிறந்த மாணிக்கங்கள் ஒளிவீசும்; தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை - பழமைச் சிறப்புற்ற நகைகள் வெளியிடும் ஒளியின் கூட்டம், எல்லாம் உடன் ஆய் எழலால்- எல்லாம் ஒன்று சேர்ந்து மேலே கிளம்புதலால்; ஒரு தன் வில்லால் - இணையற்ற தன் இந்திரவில் எனும் வானவில்லால்; ஒளிர் மேகம் எனப் பொலிவான் - விளங்கும் கரு மேகம் போல விளங்குபவன் (இந்திரன்). தாம் - அசை.
பாடம் - ஒளி, நகைகளின் சிறப்பைப் பழமை உணர்த்தும். இந்திரனுக்கு மேகமும், அவன் பூண்ட நகைகளுக்கு இந்திர வில்லும் உவமை. இந்திரன் நிறம் கருமை. பல நிற ஒளி மணிகள் பதித்த நகைகள் வானவில்லின் பலநிறங்கள் கொண்டதற்கு ஏற்புடைத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the light of the many thousands of great gems that blaze
- in his ancient, splendid ornaments
- rose up all together, he shone
- like a cloud lit by its own peerless bow.
What the poem says
The many-coloured light of the countless gems in Intiraṉ's ornaments rises together like a rainbow, which in Tamil is called Intiraṉ's bow. Since Intiraṉ himself is dark, he looks like a rain-cloud with a rainbow arched across it.