கம்பராமாயணம் 2675 · ஆரணிய 2.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உலகம் தனில் மானா - உலகத்தில் வேறு உவமை இல்லாத, மன்றல் பொரும் தேன்நாறு நலம் செறி தொங்கலினான் - தெய்வ மணம் வீசும், தேனின் சிறப்புமிக்க மாலை உடையவன்; வான் நாடியர் மீனொடு கடுத்து உயர்வென்றி அவாம் கண் எனும் - தேவமகளிரின் மீன்களைப் பகைத்து மேலான வெற்றியை விரும்பும் கண்கள் எனும்; வாள் உடையான் -வாள்களைத் தன் படையாகக் கொண்டவன் (இந்திரன்).
தேவமகளிர் கண்களுக்கு வாட்படை உவமை. அவர்கள் கண்களைக் கொண்ட, யாகம் செய்து இந்திர பதவியை அடைபவரை வெல்பவன் இந்திரன். கடுத்து - ஒத்து எனலுமாம். தெய்வ மகளின் கண் எனும் வாள்களைத் தன் மேல் பதியப் பெற்றவன் எனலுமாம். மானா உலகம் என்பது பொன்னுலகத்தைக் குறிக்கும் என்பர் சிலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Peerless in the world, he wore a garland that vied in fragrance,
- smelling of honey, full of goodness;
- and, rivalling fish and eager for lofty victory,
- the eyes of the women of heaven were the swords he bore.
What the poem says
Intiraṉ wears a heavenly garland smelling of honey. His weapons are the eyes of the celestial women, sharp as swords and shaped like fish; with them he defeats those who try to win his throne through sacrifices, by sending the nymphs to distract them. Another reading is that those sword-like glances are always turned on him.