கம்பராமாயணம் 2676 · ஆரணிய 2.13

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எல்வான் சுடர் மாலை இராவணன் மேல் - ஒளி மிக்க சூரியனைப் போல் விளங்கும் மணி மாலைகள் அணிந்த இராவணன் மீது; வெல்வான் நசையால் விசையால் விடுநாள் - அவனை வெல்லும் ஆசையால் வலிவோடு எறிந்த பொழுது; நெல் வாலும் அறாத - நெல்லின் வால் நுனி போன்ற சிறு பகுதியும் அழிந்து போகாத; நிறம் பிறழா வல்வாய் மடியா- ஒளி மாறாத வலிய அதன் வாய்நுனி அழியாத; வயிரப்படையான் - வச்சிராயுதம் எனும் படைக்கலம் உடையவன் (இந்திரன்)

நெல்வால் - நெல்லின் நுனியில் அமைந்த நுட்பமான கூரிய பகுதி. 'கதிர் வாலின் செந்நெல் உள' (2688). இராவணனால் ஒரு சிறிதும் ஊறு படுத்த முடியாத வயிரப்படை. இது இருதலைச்சூலமாய் நடுவே பிடி அமைந்த படைக்கலன். இந்திரன் ததீசி முனியை வேண்டிய போது அவர் அளித்த அவரது முதுகெலும்பால் ஆனது. ஆயின் காப்பிய எதிர்த் தலைவனாம் இராவணன் மேல் வெற்றி கொள இந்திரன் எதிர்ந்த போது அவன் மீது சிறிதும் ஊறு விளைவிக்காமலும் தன்னொளி கெடாமலும் இருந்த படை என்ற குறிப்புப் பொருளும் கொள்ள இடமுண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When, longing to conquer, he hurled it with force
  2. at Irāvaṇaṉ, who wore garlands bright as the blazing sun,
  3. not a rice-awn's tip was lost from it, its lustre never altered,
  4. its strong edge never blunted: such was his diamond weapon.

What the poem says

Intiraṉ's weapon is the vajra, the thunderbolt made from the backbone of the sage Tatīci, a two-headed spike gripped in the middle. When he hurled it at Irāvaṇaṉ, Irāvaṇaṉ could not damage it in the least.

The commentary notes a hidden irony: the weapon also did Irāvaṇaṉ no harm at all, staying bright and unbroken because it never really struck him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1velvāṉ nacaiyāl vicaiyāl viṭu nāḷ,
el vāṉ cuṭar mālai irāvaṇaṉmēl,
nel vālum aṟāta niṟam piṟaḻā
val vāy maṭiyā vayirap paṭaiyāṉ.