கம்பராமாயணம் 2677 · ஆரணிய 2.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்றான் - (இந்திரன் அச் சரபங்கர் ஆசிரமத்தில்) சென்று நின்றான்; எதிர் நின்ற நெடுந்தவனும் எதிர் கொண்டு சென்றான் - அங்கு அவன் எதிரில் நின்ற பெருந்தவம் செய்தவனாகிய சரபங்கனும் எதிர் வந்து அழைத்துச் சென்றான்; சிறப்பு அமையா - வந்த அதிதிக்குரிய உபசாரங்கள் செய்து; 'இவண் எய்தியவாறு என்' எனலும் - 'இங்கு நீ வந்த காரணம் யாது' எனக் கேட்டலும்; பொன்றாத பொலங் கழலோன் புகலும்- கெடாத பொற்கழல் அணிந்த இந்திரன் பின்வருமாறு கூறினான்; தான் -அசை.
நின்ற நெடுந்தவன் என்பதற்கு நிலைபெற்று நெடிய தவம் செய்த சரபங்க முனிவன் எனலுமாம். இந்திரன் பெற்ற பல வெற்றிகளைக் குறிக்கும் பொலங்கழல் அணிந்த நிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He stood there; and the great ascetic who stood before him
- came out to receive him and, offering due honours,
- asked, 'What brings you here?' And then
- he of the unfailing golden anklets spoke.
What the poem says
Intiraṉ arrives at Carapaṅkaṉ's hermitage. The sage of long and steadfast penance comes out to welcome him, offers the honours due to a guest, and asks why he has come. Intiraṉ, whose golden anklets mark his many victories, replies.