கம்பராமாயணம் 2678 · ஆரணிய 2.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் ஆர் சடை மாதவ - பொன்னிறம் பொருந்திய சடையுடைய பெரும் தவத்தோனே; நின்னால் இயல் நீதி நெடுந்தவம் - உம்மால் செய்யப்பெற்ற முறை தவறாத பெருந்தவம்; என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் - எவ்வகையாலும் எடுத்துக் கூறுவதற்கு அரியது என்று உணர்ந்தவனாகி; அந்நான்முகன் நின்னை அழைத்தனனால் -அந்த நான்கு முகமுடைய பிரமதேவன் உம்மைத் தம் உலகிற்கு வர அழைத்தனன் ஆதலின்; இன்று போதுதி- இப்பொழுது அங்குப் போக எழுந்தருள்வீராக; ஆல் - அசை.
என்னால் கூடக் கூற இயலாது என்ற கூற்றை இந்திரன் கூற்றாகவும் கொள்ளலாம். இந்திரன் ஐந்திரம் எனும் இலக்கணம் இயற்றிய அறிஞன். அத்தகையவனாலும் சரபங்கரின் தவப் பெருமை கூறுதற்கரியது என அவர் பெருமை உணரப்பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The great penance of right conduct you have performed
- is too hard for anyone to describe': knowing this,
- that Four-faced One has summoned you;
- O great ascetic of the golden matted hair, come away today!
What the poem says
Intiraṉ explains that Piramaṉ, the four-faced creator, knows Carapaṅkaṉ's penance to be beyond description and has invited him to his own world. The words 'too hard to describe' may also be Intiraṉ's own, and he was the author of a grammar, so even a master of words finds the sage's greatness beyond telling.