கம்பராமாயணம் 2679 · ஆரணிய 2.16

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தாய்! - எம் தந்தை போன்ற பெரியீர்!; உலகு யாவையும் எவ்உயிரும் தந்தான் உறையும் நெறி தந்தனன் - உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும் படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை உமக்கு அருளினான், அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம் அழியாத பெருந்தவத்தால் அடையத்தக்கதாகும்; நீ வந்தாய் எனின் - நீர் அங்கு வருவீர் என்றால், நின் எதிரே வருவான்- அப்பிரம தேவன் உம் எதிர் வந்து அழைத்துச் செல்வான்; ஆல் - அசை.

நெறி - இடம், நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே விளியாக்கிக் கெடாத பெருந்தவத்தை உடையோய் எனக் கூறலுமாம். எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Father! He who made all the worlds and every life
  2. has granted you a place where he dwells;
  3. that is a realm won by great, unfailing penance; if you
  4. will come, he will come out to meet you.

What the poem says

Intiraṉ continues: Piramaṉ, maker of all worlds and creatures, offers the sage a place in his own heaven, Cattiyalōkam, a realm reached only by great penance. If Carapaṅkaṉ comes, Piramaṉ himself will come out to welcome him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1entāy! ulaku yāvaiyum ev uyirum
tantāṉ uṟaiyum neṟi tantaṉaṉāl
nantāta peruntava nāṭu atu nī
vantāy eṉiṉ niṉ etirē varuvāṉ.