கம்பராமாயணம் 2680 · ஆரணிய 2.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை - அச்சத்திய லோகம் மற்றெல்லா உலகங்களுக்கும் சிறந்தது என்பதை; யான் சொல்லாவகை - நான்கூறாதபடி; நீ உணர் தொன்மையை - நீர் முன்னமே அறியும் பழமையுடையவராவீர்; (ஆதலின் உமக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை); நல்லாள் உடனே நட நீ எனலும் - உம்மனைவியுடன் வந்தருள்வீர் நீர் என்று இந்திரன் கூறவும்; வால்அறிவான் அல்லேன் என அறைவான் - சிறந்த அறிஞனாகிய சரபங்கர் அதற்கு இசையேன் என்று சொல்வார்; ஆல்- அசை. 'நீ உணர் தொன்மையை' என இந்திரன் சரபங்கரிடம் கூறியதால் இந்திரனும் அறியாத மிகப்பழங்காலத் தவசி அவர் என்பது தெரிகிறது. வாலறிவான் என்ற தொடர் குறளில் (2) காணும் 'வாலறிவன்' என்பதுடன் ஒப்பிடற்குரியது. நல்லாள் என்பது முனிவரின் மனைவி என்பதைப் பின் வரு பாடலாலும் (2628) அறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That it stands above all the worlds, without my telling,
- you know, being so ancient;
- go now, together with your good lady.' At this,
- 'I will not,' said he of pure wisdom.
What the poem says
Intiraṉ adds that he need not describe the excellence of Piramaṉ's world, since the sage is older than Intiraṉ himself and knows it already, and invites him to go with his wife. But Carapaṅkaṉ, a man of pure wisdom, a phrase that echoes the opening of the Tirukkuṟaḷ, refuses.