கம்பராமாயணம் 2681 · ஆரணிய 2.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சொல் பொங்கு பெரும் புகழோய் - சொற்களால் மேம்படும் உயர்ந்த கீர்த்தியுடையோனே!; மாய்தொழில் சிற்பங்களின் வீவன சேர்குவெனோ - அழியும் வினையையுடைய அற்பப் பொருள்கள் போல அழியக்கூடிய பதவிகளை யான் அடைவேனோ?; (மாட்டேன்); அற்பம் கருதேன் - கீழான இப்பதவியை அடைய விரும்பேன், என் அருந்தவமோ கற்பம் பல சென்றது காணுதி - யான் செய்த அரிய தவமோ பல கற்பகாலங்கள் சென்றவை ஆயின; இதனை நீ அறிவாயாக; ஆல்-அசை.
சொல் பொங்கு பெரும் புகழோய் என இந்திரனை விளித்தலால் வியாகரண சாத்திரங்களை அவன் நன்குணர்ந்தமை பெறப்படும். தொழில்மாய் சிற்பம் என்றதால் பிரமலோகமும் அழியும் அற்பப் பொருள் என அறியலாம். கற்பம் - பலயுகங்கள் கொண்ட காலம்; சென்ற பாடலில் (2603) தொன்மையை என்றமை இதன் பொருளை விளக்கி நிற்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O you of great fame that swells in words! Shall I take up stations that perish,
- like crafted things whose making passes away?
- I do not care for trifles; as for my hard penance,
- see, many aeons have gone by in it!
What the poem says
Carapaṅkaṉ answers that Piramaṉ's world, like everything made, will eventually perish, so it is a trifle he does not want. He has practised penance through many cosmic ages. He calls Intiraṉ 'famed in words', a nod to his mastery of grammar.