கம்பராமாயணம் 2682 · ஆரணிய 2.19

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சொற்றும் தரம் அன்று இது ; சூழ் கழலாய் !
பெற்றும் பெறுகில்லது ஒர் பெற்றியதே ;
மற்று என் பல சொல் : இவண் வந்து தவம்
முற்றும் பகல் தானும் முடித்தனன் ஆல் .

பொருள் · Meaning in Tamil

சூழ்கழலாய்- கட்டிய வீரக்கழல் அணிந்தவனே!; இது சொற்றும் தரம் அன்று - நீ சொல்லும் இது பேசத்தக்கது அன்று; (ஏனெனில் அப்பேறு) பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே - அடைந்தாலும் அடைந்ததாகக்கருதப்படாத ஒரு தன்மையதாகும்; மற்று என்பல - வேறு பல சொல் கூறுவது எதற்கு?; நீ இவண் வந்ததனால் - நீ இங்கு வந்ததால்; பகல் தானும் முற்றும் முடிந்துளது - என் வாழ்வுக் காலம் முழுதும் முடிந்ததாகும்; ஆல் - அசை.

பிரமலோகப் பதவியைச் சரபங்கர் அற்பமாகக் கருதியதையும் இந்திரன் வந்ததால் தம்வாழ்வுக் காலம் முடிவுறுவதையும் அவர் உணர்ந்த நிலை புலப்படுகிறது. சிறந்த தவம் புரிந்தோர் தவமுடிவைத் தேவர் முதலோர் வந்து தெரிவிப்பதை இக்காண்டப் பாடலில் (3705) வீட்டினுக்கு அமைவதான மெய்ந்நெறி வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர் என்ற தொடர் கூறும். பகல் என்பது நேரத்தின் பொதுப் பெயராய் இங்கு வாழ்நாளைக் குறிக்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. This is not a thing worth speaking of, you of anklet-bound feet!
  2. It is of a kind that, even when gained, is not truly gained;
  3. why say more? Since you have come here,
  4. my day, the whole of it, has reached its end.

What the poem says

The sage dismisses Piramaṉ's heaven as a prize that is no real gain. But he understands the meaning of Intiraṉ's visit: when the gods come to an ascetic like this, his penance and his life are complete. His 'day' here means his whole lifetime.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṟṟum taram aṉṟu itu; cūḻ kaḻalāy!
peṟṟum peṟukillatu or peṟṟiyatē;
maṟṟu eṉ pala? nī ivaṇ vantataṉāl
muṟṟum pakal tāṉum muṭintuḷatāl.