கம்பராமாயணம் 2684 · ஆரணிய 2.21

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று இன்ன விளம்பிடும் எல்லையின் வாய் - என்று இப்படிச் சரபங்கர் கூறிய போது; வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா - வலிமையும் திண்மையும் உடைய வில்லேந்திய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு வந்தடைந்து; ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் - அவ்விடத்துப் பொருந்திய, மேலெழும் ஆரவாரத்தினால் காரணத்தை அறிந்தவராய்; நின்று - அவ்விடத்தே நின்று; என்னைகொல் இன்னது எனா நினைவார் - என்னவோ இங்கு நிகழும் செயல் என்று கருதினார்.

கிளர் ஓசை - இந்திரனுடன் வந்த யானை முதலியவற்றால் எழுந்த ஓசை. வன் திண் - ஒருபொருட் பன்மொழி. கொல் - ஐயப் பொருள் தரும் இடைச் சொல். அணுகா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While he was saying these things,
  2. the heroes of strong, sturdy bows came near too,
  3. and sensing something from the clamour rising there,
  4. they stopped and wondered, 'What can this be?'

What the poem says

As Carapaṅkaṉ is speaking, Irāmaṉ and Ilakkuvaṉ arrive. Hearing the noise of Intiraṉ's retinue, his elephant and attendants, they halt and wonder what is happening.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu iṉṉa viḷampiṭum ellaiyiṉ vāy,
vaṉ tiṇ cilai vīrarum vantu aṇukā,
oṉṟum kiḷar ōtaiyiṉāl uṇarvār,
niṉṟu eṉṉaikol iṉṉatu? eṉā niṉaivār.