கம்பராமாயணம் 2685 · ஆரணிய 2.22

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனம் ஆல் ,
'இம்பர்த்தலை மாதவர்பால் இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் 'என்று உணரா .

பொருள் · Meaning in Tamil

நால் ஒத்தன ஒளிர் கோள் வயிரக் கொம்பு - நான்கு ஒன்றுக்கொன்று ஒத்து விளங்கும் ஒளி பொருந்திய வலிய வயிரம் போன்ற கொம்புகளை உடைய; கம்பக்கரி நின்றது கண்டன மால் -அசைந்தாடும் ஐராவத யானை நின்றுள்ளதைப் பார்த்தோம் ஆதலின்; இம்பர்தலை - இவ்வுலகில்; மாதவர்பால் - பெருந்தவம் செய்த சரபங்கரிடத்து; இவண் உம்பர்க்கு அரசு எய்தினன் ஆம் - இங்கே தேவர்க்கரசனாம் இந்திரன் அடைந்தான்; என்று உணரா - என அறிந்து,

கம்பக் கரி என்பதற்குக் கம்பத்தில் கட்டப்படும் யானை என்றும், கண்டோர்க்கு அச்சத்தை உண்டாக்கும் யானை என்றும் உரைப்பர். இம்பர்த் தலை மாதவர் என்பதை சரபங்கர் கூற்றிலேயே 'என் அரும்தவமோ கற்பம் பல சென்றது' (2604) என வருதல் காணலாம். ஐராவத யானை நான்கு கொம்புகளை உடையது. எனவே கொம்பு ஒத்தன நால் என்றார். வயிரம் என்பதைக் கிம்புரி என்பர் சிலர். வயிரக் கம்பம் எனத் திண்ணிய கட்டுத்தறி எனவும் ஆம். உணரா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With four matched tusks, shining, strong as diamond,
  2. the swaying elephant stands here, we see;
  3. so to the great ascetic, foremost in this world, here
  4. the king of the gods has come,' they understood.

What the poem says

Seeing Airāvatam, the four-tusked elephant of Intiraṉ, standing outside the hermitage, the brothers realise that the king of the gods has come to visit the great sage, whose penance has lasted many ages.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kompu ottaṉa nāl oḷir kōḷ vayirak
kampak kari niṉṟatu kaṇṭaṉamāl,
'impar talai mā tavarpāl ivaṇ ām
umparkku aracu eytiṉaṉ 'eṉṟu uṇarā.