கம்பராமாயணம் 2693 · ஆரணிய 2.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூலத்து ஒன்று ஆகி- ஆதியில் ஒரே பொருளாகி இருந்தும், உருவம் பல ஆகி - பின் அந்த ஒன்றிலிருந்து பல வடிவங்களாகப் பிரிந்தும்; உணர்வும் உயிரும் பிறிதாகி - அறிவும் உயிரும் உடலும் ஆகி; ஊழி சென்று ஆசறும் காலத்து - ஊழிக்காலம் கடந்து உலகம் முடியும் காலத்து; அந்நிலையது ஆகி - அப்பொழுதுள்ள தன்மையது ஆக; திறத்து உலகம்தான் ஆகி - பல திறப்பட்ட உலகங்களுமாய்; செஞ்செவே நின்ற நன்று ஆய ஞானத் தனிக்கொழுந்தே - மிகச் செம்மையாய் நின்ற மேலான ஞானத்தின் ஒப்பில்லாத கொழுந்து போன்றவனே; எங்கள் நவை தீர்க்கும் நாயகமே - எம் போன்றவர்களின் குறைகளைப் போக்கும் தலைமைப் பொருளே!; நல்வினையே நோக்க நின்றாரைக் காத்தி - நல்ல செயல்களையே கருதுவோரைக் காப்பாற்றுகின்றாய்; அயலாரைக் காய்தி - பாவச் செயலைக் கருதுவோரை அழிக்கின்றாய்; நிலை இல்லாத் தீவினையும் - எப்போதும் நிலையற்ற பாவச்செயல்களும்; நீ தந்தது அன்றே - நீ படைத்தவை அன்றோ?
முதலில் எல்லாம் கலந்த ஒரு பொருளாய் இருந்த பரம் பொருள் உலகப் படைப்பிற்காகப் பல பொருளாய் விரியும், ஊழிக்காலத்தில் யாவும் அழிய முன்னிருந்த ஒன்றாக விளங்கும். இதனால் படைத்தல் காத்தல் அழித்தல் என்பன மாறி வருவன என்றும், நல்வினை தீவினை என்பன இறைவனால் படைக்கப்பட்டவை என்றும் புலப்படும். ஆசறுதல் - முடிதல். நிலை இல்லாத் தீவினை - தோன்றும் பொருள்கள் யாவும் நிலையின்றி அழிவன என அறியாமையால் உளவாகும் தீவினைகள். செஞ்செவே - குறிப்புச் சொல். கொழுந்து, நாயகம் என்பன உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Being one at the root, then many in form, becoming other as mind and as life, and when the age
- has run its course and all is ended, becoming that state once more, being the worlds of every kind, standing perfectly true,
- O good and peerless shoot of wisdom! O Lord who ends our ills! Those who stand looking only to good deeds
- you protect, and the others you destroy; and fleeting evil deeds too, did you not make them?'
What the poem says
Intiraṉ describes the cycle of creation: the Supreme is one at the beginning, becomes the many forms, minds and lives of the world, and at the end of the age returns to oneness. He protects the good and destroys the wicked, yet even evil, which arises from not knowing that all things pass, is his creation.