கம்பராமாயணம் 2694 · ஆரணிய 2.31

Section ஆரணிய காண்டம் / 2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

எந்தாய் - எங்கள் தந்தையே! மேல்நாள் வல்லை வரம்பு இல்லாத மாய வினை தன்னால் - முன்காலத்தில் வலிமை வாய்ந்த எல்லை இல்லாத மாயையின் சூழ்ச்சியால்; மயங்கினரோடு எய்தி மதிமயங்கி - அறிவு மயக்க முற்றவரோடு சேர்ந்து அறிவு திரிந்து; இறைவன் நீ அல்லை - பரம்பொருளாகிய கடவுள் நீ அன்று என்றும்; ஆதி என - நீயே கடவுள் என்றும்; பேதுற்று அலமருவேம் - தடுமாறி வருந்தும் எங்களுடைய; முன்னை அறப்பயன் உண்டாக - முற்பிறவியில் செய்த நல்வினையின் பயன் ஏற்பட; அந்நாள் எல்லை வலயங்கள் நின்னுழை என்று - அக்காலத்து எல்லையாக உள்ள உலகங்கள் உன்னிடத்துத் தங்கியுள்ளன என்று; எழுவர் என நின்ற தொல்லை முதல் முனிவர் - எழுவராய் நிலைபெற்ற பண்டை முனிவர்கள்; எரியோனைத் தீண்டிச் சூளுற்றபோது - அக்கினியைத் தீண்டிச் சபதம் செய்த போது; தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ - யார் பரம் பொருள் என அறியாது திரண்டு நின்ற எங்கள் சந்தேகத்தையும் நீ அழித்தாய் அல்லவோ?; ஏ-அசை.

மாய வினை - இராசச, தாமசக் குணங்களால் ஏற்படும் தீவினைகள். எரியோன் என்பதற்குத் தழல் நிறங்கொண்ட சிவன் என்பர் சிலர். ஏழு முனிவர்: அத்திரி, பிருகு, குத்சர், வசிட்டர், கௌதமர், காசிபர், ஆங்கிரசர் ஆவர். சூளுற்றது; திருமாலே பரம் பொருள் என்றது, இவ்வரலாறு பற்றிய செய்திகள் புலப்படவில்லை. இது பற்றிப் பலவாறு உரைப்பாரும் உளர். வலயம் - குவலயம் என்ற சொல்லின் முதல்குறையும் ஆம் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Long ago, deluded by the mighty, boundless work of illusion, falling in with the deluded, our minds confused,
  2. "You are not the Lord," "You are the First," so we wavered, bewildered and distressed; then, as the fruit of our former merit,
  3. on that day, "All the circling worlds to their very ends are within you," touching the Fire, the seven
  4. ancient first sages swore; and did you not, in that moment, wipe away all our gathered doubt, Father?'

What the poem says

Intiraṉ confesses that the gods were once confused by illusion and argued whether or not Tirumāl was the Supreme. Their doubt ended when the seven ancient sages touched fire and swore that all the worlds are contained in him. The commentary says the source of this story is unclear; some read 'the Fire' as Civaṉ, who is fire-coloured.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vallai varampu illāta māya viṉaitaṉṉāl mayaṅkiṉarōṭu eyti, mati mayaṅki, mēlnāḷ,
allai iṟaiyavaṉ nī āti eṉap pētuṟṟu alamaruvēm, muṉṉai aṟap payaṉ uṇṭāka,
'ellai valayaṅkaḷ niṉṉuḻai 'eṉṟu, an nāḷ, eriyōṉait tīṇṭi eḻuvar eṉa niṉṟa
tollai mutal muṉivar cūḷuṟṟa pōtē tokai niṉṟa aiyam tuṭaittilaiyō? entāy! '